பக்கம்:தொல்காப்பிய மூலம்-பாட வேறுபாடுகள்-ஆழ்நோக்காய்வு.pdf/5

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

ii

மீண்டும் பரிசோதித்து, மூல பாடத்தையும் பாட வேறுபாடுகளையும் புதிதாக எழுதி, சில நூலகங்களுக்குச் சென்று, அச்சான நூல்களைப் பார்த்து உறுதி செய்து,அச்சுப்பிழை ஏதுமின்றிச் சிவகாசியில் சண்முகா அச்சகத்தில் லேசர்படி ஒன்றை உருவாக்கினார்.

பாடபேதங்களின் அடைப்படையில்தான் மூலபாடத்தை நிர்ணயம் செய்ய முடியும். பல பதிப்புக்கள் பாடபேதங்களை வெளியிடாமல் இருப்பதைக் கண்டு ஆய்வாளர்கள் வருந்தினர். அந்தக் குறையைப் போக்குவதற்காகவே கிடைத்துள்ள பாடவேறுபாடுகள் அனைத்தையும் இந்நூலில் தொகுத்துக் கொடுத்துள்ளோம். மூலபாடத்தை இப்பதிப்பில் நிறுவ முயலவில்லை. அதனை வருங்காலத்தில்தான் செய்து முடிக்க வேண்டும்.

தொல்காப்பியத்தின் ஆங்கில மொழிபெயர்ப்பு உருவாகி முடியும் தருணத்தில் இருக்கிறது. அதனையும் விரைவில் வெளியிட முயன்று வருகிறோம்.

இந்தப் பணி சிறக்கப் பலவகையிலும் உதவி புரிந்த தமிழக அரசிற்கு எங்கள் நன்றியைத் தெரிவிக்கக் கடமைப்பட்டுள்ளோம். முன்னாள கல்வியமைச்சராக இருந்த பேரா. க. அன்பழகன், முன்னாள் முதலமைச்சர் கலைஞர். மு. கருணாநிதி, அதன் பின்னர்க் கல்வியமைச்சரான பேரா. க பொன்னுசாமி, நிதியமைச்சர் டாக்டர். இரா. நெடுஞ்செழியன், முதலமைச்சர் செல்வி. ஜெயலலிதா. தமிழ்ப் பண்பாட்டுத் துறை முன்னாள் செயலர் திரு. சா.பா. இளங்கோவன். இந்நாட் செயலர் திரு. கிறுத்துதாஸ் காந்தி ஆகியவர்களுக்கும். ஏனைய அன்பர்களுக்கும் ஒலைச்சுவடி நூலகத்தாருக்கும் எங்கள் உளங்கனிந்த நன்றி.

பி. கோபிநாதன் நாயர்

வ.அய். சுப்பிரமணியம்

வெளியீட்டு இயக்குநர்

இயக்குநர்

திருவனந்தபுரம்

21–11–1995