பக்கம்:தொல்காப்பிய மூலம்-பாட வேறுபாடுகள்-ஆழ்நோக்காய்வு.pdf/69

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

34 எழுதததிகாரம 158 மெல்லெழுத்து மிகுவழி வலிப்பொடு தோன்றலும் வல்லெழுத்து மிகுவழி மெலிப்பொடு தோன்றலும் இயற்கை மருங்கின் மிகற்கை தோன்றலும் "உயிர்மிக வருவழி யுயிர்கெட வருதலுஞ் சாரியை யுளவழிச்' சாரியை கெடுதலுஞ்' சாரியை யுளவழித்" தன்னுருபு நிலையலுஞ் சாரியை யியற்கை யுறழத் தோன்றலும் உயர்தினை மருங்கி னொழியாது வருதலும் அஃறிணை விரவுப்பெயர்க் கவ்விய னிலையலும்" மெய்பிறி தாகிடத் தியற்கை யாத லும்' அன்ன பிறவுந் தன்னியல் மருங்கின் மெய்பெறக் கிளந்து பொருள்வரைந் திசைக்கும் ஐகார வேற்றுமைத் திரிபென மொழிப. 15 பா.வே. 1. மிகும்வழி - சுவடி 10:44, 10:51 + பதிப்பு 85இல் இந்நூற்பாவின் மூன்று. நான்காவது அடிகளுக்கிடையில் ஒர் அடி சேர்க்கப்பட்டுள்ளது. அது வருமாறு: "மிகற்கை மருங்கி னியற்கை யாதலும்' "மிகற்கை மருங்கி னியற்கை யாதலும் என்பது ஏனையவற்றைவிடப் பயின்றுவரும் திரிபாகும். அதனால் அதனை ஆசிரியர் விதந்தோதாதிரார். காலப்பழமையால் விடு பட்டிருத்தல் வேண்டும். இன்றியமையாத நூற்பாவொன்று முழுமையாய் விடுபடும் போது நீண்டதொரு நூற்பாக்கண் ஒரு தொடர் விடுபடுதல் வியப்பிற்குரியதன்று. சேர்த்த தொடரினை ஏற்றுக்கொள்ளத் தயக்கமிருப்பின் அதனாற் பெறப்படும் திரிபனையும் அன்னபிறவும் என்பதனாற் கொள்ளுதற் கிழுக்கில்லை என்க. (பக். 332) பண்டைய உரையாசிரியர்களும் மூலத்தையும், தொடர்புடைய பிற இலக்கிய ஆட்சிகளையும், உலக வழக்கையும் ஆழமாக ஆராய்ந்தவர்களே. அதனால் தான் அவர்களால், காலப் பழமையாற் பெயர்த்தெழுதுவோர் விழ எழுதினர் போலும்' எனக் கூற முடிந்தது. எனினும் அவர்கள் தாமாக எழுதிச் சேர்க்கவில்லை அசைக்கமுடியாத ஆதாரங்கள் இல்லாத மூலபாட மாற்றத்தை - அது எவ்வளவு தான நம் காலப் பொருள் தெளிவிற்கு ஏற்றதாக இருப்பினும் - மூலபாட ஆய்வாள ஏற்கமாட்டார்கள். இலக்கணப் பொருள் ஆராய்ச்சி வேறு மூலபாட ஆய்வு வேறு ப.வெ.நா. பதிப்பு 77இல் இந்த அடியைக் காலப்புதுமையால் அசசகத விழி அச" டுள்ளனர். உரையில் உள்ளது.