பக்கம்:தொல்காப்பிய மூலம்-பாட வேறுபாடுகள்-ஆழ்நோக்காய்வு.pdf/8

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது
v



எஸ். எம். கத்ரேயின் அறிவுரை

இந்திய மூலபாடத் திறனாய்வு - ஒர் அறிமுகம் என்ற நூலில் ஏடுகளில் பாடங்கள் வேறுபடுதற்குரிய காரணங்களை முப்பெரும் பிரிவுகளில் எஸ்.எம். கத்ரே அடக்கியுள்ளார். (பக். 55-56)

ஹால் என்பார் அமைத்த பகுப்புக்களின்படி பாடங்களில் தவறுகள் பிற்கண்டவண்ணம் அமையும் என்பர். அவையாவன:-

I  குழப்பங்களும் அவற்றைத் தீர்த்தற்குரிய முயற்சிகளும்

1. ஒத்த எழுத்துக்களிலும் அசைகளிலும் குழப்பம்

2. சுருக்க வெழுத்துக்களைத் தவறாகப் புரிந்து கொள்ளுதல்

3. பொதுநிலையிற் காணப்படுவதைக் கொண்டு தவறாக மாற்றியமைத்தல்

4. தவறான சேர்க்கை அல்லது பிரிப்புமுறை

5. இறுதிநிலை அல்லது விகுதிகளின் ஒப்புமை காண்டலும், அடுத்துவரும் சொற்புணர்ச்சியொடு இயைபு படுத்தலும்

6. எழுத்து, சொல், வாக்கியம், இயல், பக்கம் ஆகியன முன்னும் பின்னும் மாறிநிற்றல்.

7. ஒரு மொழியைப் பிறிதொரு மொழியெழுத்தில் மாற்றி எழுதும்போது எழுத்துக்கள் மாறி விடுதல்

8. உச்சரிக்கும்போது ஒலிப்பு முறையில் தவறு ஏற்படுதல்

9. எண்களில் குழப்பம் நேர்தல்

10. இயற்பெயர்களில் குழப்பம் நேர்தல்

11. அரிய சொற்களுக்குப் பதிலாக எளிய சொற்களை மாற்றுதல்

12. பழைய எழுத்துக்களைப் புதிய ஒலிப்புக்கேற்ப மாற்றுதல்

13. தெரியாமல் நேர்ந்துவிட்ட தவறுகளைத் திருத்தி எழுதுதல்

II  நீக்கம் அல்லது விடுபாடுகள்

14. ஒரே மாதிரியான தொடக்கம் அல்லது இறுதியுள்ள சொற்கள், அசைகள் விடுபடல்

15. இயல்பாகவே ஏதேனுமொன்று விடுபடல்