பக்கம்:தொல்காப்பிய மூலம்-பாட வேறுபாடுகள்-ஆழ்நோக்காய்வு.pdf/81

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

Ho - எழுத்ததிகாரம் பால. :- "செயவென் கிளவி என்பது ஏடெழுதினோரால் நேர்ந்த பிழையென்பது காணாராய் உரையாசிரியன்மார் ஒவ்வா. உரைபகர்ந்து சென்றனர். இக்கால ஆய்வாளரும் இதனைப் பிழை என ஒராராய் வர, செய. காண என்றாற் போல வரும் செயவென்னெச்சங்களை வியங்கோள் பொருள் உணர்த்தும் என வலிந்து கொள்வர். ககர ஈற்றானன்றி அவை வியங்கோட் பொருளைத் தாராமை ஒர்ந்துணரப்படும். நட அள என்றாற் போல்வன முதனிலைத் தொழிற்பெயர். அவை எடுத்தலோசையான் ஏவல் கண்ணிய வியங்கோளாக வரும். தெய்வச்சிலையார் செய்என் கிளவி எனப்பாடங் கொண்டு (வினை 29) ஒதுவதனான் செயவென்பது வியங்கோட்பொருள் பயவாதென்பது அவர் துணிபென்பது பெறப்படும்." (பதிப்பு 78 பக். 220) "வாழிய என்னும் சொல்வடிவம் செய்யிய வென்னும் வினையெச்ச வடிவுபோல் இருப்பினும் அது வாழ்க என்னும் முற்றுப் பொருளில் வருவதனை ஒர்ந்துனர்ந்த ஆசிரியர் அதனை விளக்குவாராய், வாழியவென்னும் செய்கவென் கிளவி என்று கூறுவாராய், சூத்திரவோசை கருதி அகரத்தைத் தொகுத்துச் செய்கென் கிளவியென்றார். ஒலையில் மெய்க்குப் புள்ளிகுத்தும் வழக்கின்மையான் செயகென கிளவி என இருந்ததை ஏடெழுதுவோர் ககரத்தை வகரமாக நினைத்துச் செயவென கிளவி என எழுதினராவர். உயிர்மெய் எகர ஏகாரக் குறியீடுகள் ஒலையில் பெரும்பாலும் ஒன்றுபோலவே இருக்கும். ஆதலின் இளம்பூரணர் சேயவெனப் பாடங்கொண்டார்." (த. நூ. பா. வே. பக் 6ே, 87) தி.வே.கோ.:- 'வாழிய என்னும் செய்க என் கிளவி என்ற பாடமே ஏற்றது. அதனைத் தொகுத்துச் செய்கென் கிளவி என்று பாடமோதின் செய்கு என் கிளவி என்ற புணர்மொழியாதற் கேற்றலின் செய்கவென் கிளவி என்ற பாடமே கொள்ளத்தக்கது." ப.வெ.நா.:- சுவடியெழுத்துகளின் மயக்கமும் பிறழ்ச்சியும் பொருள்கோளில் எவ்வளவு குழப்பத்தை உண்டாக்க வல்லன. என்பதற்கும், மூலபாட நிர்ணயத்தின் இன்றியமையாமையை உணர்வதற்கும் இஃதோர் எடுத்துக்காட்டாகும். செயயென (சுவடி 1051), செயவென (சுவடி 73, 999), செயன (சுவடி 115. 1053) என்னும் மூன்று சுவடிவடிவங்கள் கிடைக்கின்றன. இவற்றை முறையே. 1. செய்யென. செய்யென். சேய்யென, சேய்யென். சேய்யேன, சேய்யேன் எனவும். 2. செய்வென், செய்வென. செயவென. சேய்வென. சேய்வேன் சேயவேன எனவும், 3. செயன், சேயன். செயன சேயன எனவும் படிக்கலாம். இவை இயல்பாக நேரும் படிப்புமாற்றங்கள். செயகென என இருந்த பாடத்தைச் செயவென மாற்றி எழுதி விட்டனர் என்கிறார் பால. பொதுவாக இத்தகைய பொருத்தமற்ற எழுத்துமாற்றங்கள் இலக்கணச் சுவடிகளில் நேர்தல் பெரும்பாலும் அரிது. இலக்கியச் சுவடிகளைவிட இலக்கணச் சுவடிகளில் பொதுவாகப் பிழைகள் குறைவாகவே காணப்படுகின்றன. காரணம் இச் சுவடிகள் ஆழமாகக் கற்போருக்குரியன. ஏறத்தாழ நூறு தொல்காப்பியச் சுவடிகள் இதுகாறும் பதிப்பாசிரியர்களாலும் ஆய்வாளர்களாலும் ஆராயப்பட்டுள்ளன. எதிலும் செய்கென என இல்லை. எனவே இதனை மூலபாடமாகச் சுவடியியலார் ஏற்கத் தயங்குவர். எனினும் இப்பொருள்கோள்தான் தெளிவாகவும் சிறப்பாகவும் உள்ளது என்பதில் ஐயமில்லை. o