பக்கம்:தொல்காப்பிய மூலம்-பாட வேறுபாடுகள்-ஆழ்நோக்காய்வு.pdf/83

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

48 எழுத்ததிகாரம் 223 செய்யா வென்னும் வினையெஞ்சு கிளவியும் அவ்விய றிரியா தென்மனார்' புலவர். 20 பா.வே. 1. வென்மனார் - சுவடி 115, வினையெஞ்சு கிளவி என்னும் எழுவாய் ஒருமை. பயனிலை திரியாது. 224 உம்மை யெஞ்சிய விருபெயர்த் தொகைமொழி மெய்ம்மை யாக வகர' மிகுமே. 21 பா.வே. 1. மெய்மை - சுவடி 11, 73, 1052, 1053. பிழை. மகரமெய் விடுபாடு. 2. யகர - சுவடி 34. பிழை. இங்கு வகர உடம்படுமெய்யே வரும். மெய்ம்மை யாகிய வகர - பதிப்பு 38 இல் சு.வே. 225 ஆவு மாவு விளிப்பெயர்க் கிளவியும் யாவென் வினாவும் பலவற் றிறுதியும் ஏவல் குறித்த வுரையசை மியாவுந்' தன்றொழி லுரைக்கும் வினாவின் கிளவியொடு) அன்றி யனைத்து மியல்பென மொழிப. 22 பா.வே. 1 யாவுந் - சுவடி 115. பிழை. மிகரம் விடுபட்டது. 2. ஒன்றி - சுவடி 1051 பிழை. பொருள் வேறுபடுகிறது. 3. ஒன்றிய வனைத்து - சுவடி 73 எழுத்துப்பிழை 226 வேற்றுமைக் கண்ணு மதனோ ரற்றே. 23 227 குறியதன் முன்னரு மோரெழுத்து மொழிக்கும் -- அறியத் தோன்று மகரக் கிளவி 24 228 . இராவென் கிளவிக் ககர மில்லை. 25 229 நிலாவென் கிளவி யத்தொடு சிவனும்'. 26 + பால. பதிப்பு 77இல், "இச் சூத்திர பாடம் அத்தொடுஞ் சிவனும் என்றிருத்தல் வேண்டும். அவ்வழி மிகையாற் கொள்ளப்பெற்றவை சூத்திரத்தானே அடங்குமென்ப" என்கிறார்.