பக்கம்:தொல்காப்பிய மூலம்-பாட வேறுபாடுகள்-ஆழ்நோக்காய்வு.pdf/89

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

எழுத்ததிகாரம் 270 ஊவெ னொருபெய ராவொடு சிவனும். 57 271 அக்கென் சாரியை பெறுதலு முரித்தே தக்கவழி யறிதல் வழக்கத் தான 68 272 ஆடுஉ மகடூஉ' வாயிரு பெயர்க்கும் இன்னிடை வரினு மான மில்லை. Eo பா.வே. 1. ஆடுமகடு"- பதிப்பு 77 27.3 எகர வொகரம் பெயர்க்கீ றாகா முன்னிலை மொழிய வென்மனார் புலவர் தேற்றமுஞ் சிறப்பு மல்வழி ТТІПТЕГЕТ, 70 சுவடி 115இல் முதல் இரண்டு அடிகள் ஒரு நூற்பாவாகவும். இறுதியடி மற்றொரு நூற்பாவாகவும் காணப்படுகிறது. எனினும் ஒரே எண் கொடுக்கப்பட்டுள்ளது. 27.4 தேற்ற வெகரமுஞ்' சிறப்பி னொவ்வும்" மேற்கூ றியற்கை வல்லெழுத்து மிகா.அ.’ 7 I பா.வே. 1. தேற்றே காரமு - சுவடி 1051 பிழை. பொருள்வேறுபாடு தேற்ற வெகாரமு - சுவடி 115 எழுத்துப்பிழை. + - "இச் துத்திரத்தில் 'ஆஉேமகடு' என்பது பாடமா, 'ஆடுமகடு என்பது LJ TTL_ TIT ITT-T ஆராய்தற்பாலது. ஊகாரவதிகாரத்தில் இச் சூத்திரம் படிக்கப்பட்டமையானும், ஆ.ே மகடு என்ற பாடமே சொல்லதிகாரத்துப் பெயரியலிற் சேனாவரையராற் கொள்ளப்பட்டமையானும், ஆடுஉ மகடூஉ என்பன ஆசிரியர் கொள்கையில் உகர வீறாகாமையானும், இவை குற்றெழுத்தின்பின்னர் ஊகாரத்தைக் கொண்ட ஈரெழுத்தொரு மொழியாக இல்லாமையின் 'குற்றெழுத்திம்பரும் என்ற சூத்திரத்தான் உகரம் பெற்றன எனக் கூறலாகாமையானும் ஆடு மகடு என்பதே பாடமோ எனத் தோன்றுகிறது. ஆடுமகடு பாடமாயின் ஆங்கு உகரம் நிகழுஉ நின்ற (சொல். 173) என்றவிடத்துப்போல அளபெடையாகும். அவ்வாறாயின் ஆடுவறிசொல் (சொல்...2) போன்றவிடங்களினும் உகரம் செய்யுளில் வந்த அளபெடையாகக் கொள்ளல் தகும்." சுப்பிர. (பதிப்பு 58 பக். 177) "ஆடு மகடு என்பவை குற்றெழுத்தின்பின் வந்த ஊகார ஈறு அல்லவாயினும் ஒப்புமையாக்கத்தான் உகரம் பெற்று ஆடுஉ மகடூஉ என வழங்கப்படுகின்றன வழங்கினும் அவற்றை உகர ஈறாகக் கொள்ளாமல் ஊகார ஈறாகவே கொள்க' பால (பதிப்பு 77 பக் 247)