பக்கம்:தொல்காப்பிய மூலம்-பாட வேறுபாடுகள்-ஆழ்நோக்காய்வு.pdf/9

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

vi

III  சேர்க்கை

16. முன்னரோ அடுத்தோ பயின்ற ஒன்றை மீண்டும் சொல்லுதல்

17. விளக்கங்களுக்காகச் சிலவற்றை இடைச்செருகுதல்.

18. இருசொற்களை ஒருங்கிணைத்துச் சொல்லுதல்.

19. இனமானவற்றின் செல்வாக்கால் அமையும் சேர்க்கைகள். (காண்க: வெ.ப. பக். 6)

மேற்கண்டவை பொதுவாக இந்திய மொழிகளிலுள்ள எல்லா நூல்களுக்கும் பொருந்துமாறு அமைக்கப் பெற்றவை. ஆகையால் தொல்காப்பியப் பாட வேறுபாடுகள் பற்றிய ஆய்வுக்கு இவற்றுள் சில மட்டுமே பொருந்தும் எனலாம்.

பாடவேறுபாடுகளைக் காட்டிய முன்னோடிகள்

பாடபேத ஆய்வின் முன்னோடிகளாகக் கருதத் தக்கவர்கள் தொல்காப்பிய உரையாசிரியர்களே ஆவர். இவர்களுள் காலத்தால் முற்பட்டவர் இளம்பூரணர்.

எழுத்ததிகாரத்தில் இளம்பூரணர் கொண்ட பாடத்தினின்று நச்சர். வேறுபடும் இடங்கள் 39. சொல்லதிகாரத்தில் இளம்பூரணர் தனித்துக் கொண்ட பாடங்கள் 18; சேனாவரையர் மட்டும் கொண்டவை 5; தெய்வச்சிலையார் மட்டும் கொண்டவை 34; நச்சினார்க்கினியர் மட்டும் 9; கல்லாடர் கொண்டவை 2; பழைய உரையாசிரியர் 4 என்பார் வெ. பழனியப்பன்.

உரையாசிரியர்களைத் தவிரத் தொல்காப்பியப் பதிப்பாசிரியர்களும் ஆய்ந்து பல பாடவேறுபாடுகளைக் காட்டியுள்ளனர். அவற்றுள் பழமையானவை தொல்காப்பிய மூலம் மட்டும் அமைந்த பதிப்புக்களே.

1922இல் வெளிவந்த சிதம்பர புன்னைவனநாத முதலியாரின் மூலப் பதிப்பு பெரும்பாலும் நச்சினார்க்கினியர் பாடத்தைத் தழுவியுள்ளது. பல சுவடிகளை ஒத்து நோக்கி முந்தைய அச்சுப் பதிப்புக்களையும் பார்த்துப் பதிப்பிக்கப் பெற்றுள்ள இதில் ஏறத்தாழ 71 பாடவேறுபாடுகள் காட்டப் பெற்றுள்ளன. செய்யுளியலில் தான் மிகுதியான பாட வேறுபாடுகள் உள்ளன. காண்க: தொல்காப்பியப் பதிப்புகள் (பக். 93, 94)

கா. நமச்சிவாய முதலியார் தம் எழுத்து, சொல் மூலப்பதிப்பில் 17 இடங்களிலும், பொருள் மூலத்தில் 121 இடங்களிலும் பாடபேதங்களைக் குறித்துள்ளார்.

இளவழகனாரின் கழகப் பதிப்பில் இளம்பூரணர் கொண்ட 8