பக்கம்:தொல் திராவிட மொழி-கண்டுபிடிப்பு.pdf/11

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

தொல் திராவிட மொழி
கண்டுபிடிப்பு

திராவிட மொழிக் குடும்பம்

மொழிக் குடும்பங்கள்:

உலகில் பற்பல மொழிகள் பேசப்படுகின்றன. அவை பல குடும்பங்களாகப் பிரிக்கப்பட்டுள்ளன. இந்தோ-ஐரோப்பிய மொழிக் குடும்பம், திராவிட மொழிக் குடும்பம், சித்திய மொழிக் குடும்பம்,சினோ-திபேத்திய மொழிக் குடும்பம், அமெரிக்க மொழிக் குடும்பம், ஆப்பிரிக்க மொழிக் குடும்பம் முதலியன அவை. மொழிகட்கிடையே உள்ள பல்வேறு ஒற்றுமைகளைக் கருதிக் குடும்பங்கள் பிரிக்கப்பட்டுள்ளன.

இங்கிலாந்திலிருந்து வங்காளம் வரையும் உள்ள மொழிகளுள் பெரும்பாலன இந்தோ ஐரோப்பிய மொழிக் குடும்பத்தைச் சேர்ந்தவை எனலாம். ஐரோப்பாவில் தலைமை தாங்கும் கிரேக்கம்-இலத்தின் - இவற்றினின்றும் பிறந்த - பிரிந்த-திரிந்த மொழிகள் ஆகியவையும்,வட இந்தியாவில் தலைமை தாங்கும் சமசுகிருதமும் இதினின்றும் பிறந்த - பிரித்த-திரிந்த மொழிகள் ஆகியவையும் இந்தோ-ஐரோப்பிய-மொழிக் குடும்பத்தைச் சேர்ந்தவையாகும்.

திராவிடக் குடும்பம்:

இவ்வாறு பல குடும்ப மொழிகளைப் பற்றியும் கூறலாம். இனி, இந்நூலில் விதந்து எடுத்துக் கொண்ட திராவிட மொழிக் குடும்ப மொழிகளைப் பற்றிமட்டும் ஆராய