பக்கம்:தொல் திராவிட மொழி-கண்டுபிடிப்பு.pdf/12

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

10

லாம். தென்னிந்தியாவில் பேசப்படும் மொழிகள் திராவிட மொழிகள் எனப்படுகின்றன. திராவிடம் என்ற பெயர் பற்றிய ஆராய்ச்சி இங்கே தேவையில்லை. இந்தப் பெயர், எப்படியோ, இந்தியாவின் நாட்டுப் பண்ணாகிய ”ஜன கண மன” என்று தொடங்கும் பாடலிலும் இடம்பெற்று விட்டது. தெக்கணமும் அதில் சிறந்த திராவிட நல் திரு நாடும் எனப்பேராசிரியர் சுந்தரம் பிள்ளையின் மனோன்மணியப் பாடலிலும் இடம்பெற்றுள்ளது. உலக மொழியாராய்ச்சியாளர்களாலும் இந்தப்பெயர் ஆளப்படுகிறது. இந்த அளவோடு இது பற்றிய செய்தியை நிறுத்திக் கொள்ளலாம். அடுத்து, திராவிட மொழிகளை நோக்கிப் பயணம் தொடங்கலாம்.

பத்தொன்பதாம் நூற்றாண்டின் இடைப் பகுதியில் தமிழ் நாட்டில் வந்து தங்கிய கால்டுவெல் (Caldwell) என்னும் ஆங்கில அறிஞர் தென்னிந்திய மொழிகளைக் கற்றார். அம்மொழிகட் கிடையே உள்ள இலக்கண ஒப்புமைகளை ஆய்ந்து பதினைந்து ஆண்டுகாலம் உழைத்து, 'திராவிட மொழிகளின் ஒப்பிலக்கணம்’ (Comparative Grammar of Dravidian Languages) என்னும் அரிய நூலை1865 ஆம்ஆண்டுபடைத்தளித்தார்.இவரது முயற்சி, திராவிட மொழிகள் பற்றிய ஆராய்ச்சியாளர்க்கு ஊக்கம் ஊட்டியது. இம்மொழிகளின் தொடர்பு பற்றிய எண்ணமும் எழுந்தது. இந்தத் திராவிட மொழிகள் வருமாறு:—

தமிழ், தெலுங்கு, கன்னடம், மலையாளம், துளு, குடகம், துடவர் மொழி, கோடர் மொழி, கோண்டு, கூ, குருக், படகா,கதபா, இருளா, கொலாமி, குறவா, மால்தோ, கோயா, நயிக்காடி, நாக்கிபோடி, கவர், மாலர், உராவன், பிராகுயி, பார்ஜி முதலியன திராவிட மொழிகளாகும். இவற்றுள் பிராகுயி மொழி தமிழ் நாட்டுக்கு வடமேற்கே