பக்கம்:தொல் திராவிட மொழி-கண்டுபிடிப்பு.pdf/136

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

134 இவ்வாறு திராவிட மொழிகட்கிடையே உள்ள சில திரிபு மாற்றங்களை மேலுள்ள அட்டவணையிலிருந்து விதந்து எடுத்துக் காண்பாம்: ப் - தெலுங்கு: தமிழ் ழகரம் தெலுங்கில் டகரம் ஆகிறது. எடுத்துக் காட்டுகள்: கூழு=கூடு. ஏழு= ஏடு. கோழி=கோடி. தமிழ் றகரம் தெலுங்கில் ரகரம் ஆதல். காட்டுகள்:- ஆறு=ஆரு. நூறு= நூரு. சாறு=சாரு. தமிழ் ணகரம் தெலுங்கில் னகரம் ஆகிறது. காட்டுகள்: சுண்ணம்=சுன்னம். கண்ணு-கன்னு. அண்ணன்=அன்ன. வெண்ணெய்=வென்ன. அணைக் கட்டு=அனக் கட்ட தமிழில் சில சொற்களின் இறுதியில் 'உ' சாரியை வரும் அமைப்பு, தெலுங்கில் மிகுதியாக உண்டு. தீர் =திரு=திரு. வேர்=வேரு=வேரு, பேர்= பேரு =பேரு. தெரு=தெருவு - தெருவு. குனி-கினு: இங்கே சுவையான செய்தி ஒன்றைச் சொல்ல வேண் டும். யான் திருவையாற்றில் உள்ள அரசர் கல்லூரியில் படித்துக்கொண்டிருந்தபோது நடந்தது இது. ‘தெரிந்து கொண்டு’ என்பதைத் தெரிந்துகினு’ என்றும் படுத் துக் கொண்டு என்பதைப் படுத்து கினு என்றும் 'கொண்டு என்பதைக் கினு’ என்னும் சொல்லால் குறிப்பிட்டுப் பேசினேன். இது வடதமிழ் நாட்டு வழக்கு. வேறு சில இடங்களிலிருந்து வந்திருந்த மாணாக்கர்கள், தெரிந்து கிட்டு, படுத்துகிட்டு எனக் கொண்டு என்பதற் குப் பதில் கிட்டு’ என்பதைப் பயன் படுத்தினார்கள். அவர் கள் யான் கினு போட்டுப் பேசியதைக் கிண்டல் செய்து சிரித்தார்கள். ஆனால் தெலுங்கில் கொண்டு என்பதற் குக் குனி என்பது எழுத்து வழக்கில் பயன்படுத்தப்படு