பக்கம்:தொல் திராவிட மொழி-கண்டுபிடிப்பு.pdf/142

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

140 இங்கு ஒப்பு நோக்கத் தக்கது. இதுகாறும் இது பற்றிக் கூறியதிலிருந்து இன்னும் ஒர் உண்மையை அறிய முடி கிறது. அஃதாவது: இப்போது உள்ளது போல் பண்டைக் காலத்தில் உலோக நாணயமோ அல்லது தாள்நாணயமோ(currency) இல்லை. ஒருபொருள் தந்து மற்றொரு பொருள் வாங்கும் பண்டமாற்று முறையே அன்று இருந்தது. அப்போது, மிகுதியான மாடுகள் உடையவர்களே பெருஞ் செல்வர் களாக மதிக்கப் பெற்றனர். மாட்டைக் கொடுத்து வேறு பெரிய பொருளை - அளவில் பெரிய பொருளை வாங்கு வது மரபாகும். இவ்வளவு செய்திகளையும் ஈண்டு எண் னிப் பார்க்க இந்தத் தனம்’ என்னும் சொல் வாய்ப்பு அளிக்கிறது. கன்னட மொழியில்சொல்லின் இறுதியில் ஒற் றெழுத்து வருவதில்லையாதலின் தனம் என்பது தன’ என்றே வழங்கப்படுகிறது. இந்த வழக்காறு ஒருவகைச் சுவையாகும். மலையாளம்: மலையாளம் தமிழ்ச் சேரநாடாதலின் மலையாள மொழிக்கும் தமிழ் மொழிக்கும் நெருங்கிய தொடர்புண்டு. இரண்டு மொழிகளிலும் ஒலிப்பு வேற்றுமை யில்லாமல் ஒரே மாதிரியான சொற்கள் நிரம்ப உண்டு, தூய்மை யான உருவங்களும் மலையாளத்தில் உண்டு. சில சொற் களில் ஞகரமும் ங்கரமும் வந்து இனிமை ஊட்டுகின்றன. தமிழ் நகரத்திற்குப் பதிலாகவும் தமிழ் சகரத்திற்குப் பதி லாகவும் ஞகரம் வருவது இனிமை தருகிறது. எடுத்துக் காட்டுகள் : நான் = ஞான்; நாங்கள் = ஞாங்கள்; நரம்பு=ஞரம்பு; நண்டு=ளுண்டு; நாவல் = ஞாவல். கஞ்சி=கஞ்ஞ;