பக்கம்:தொல் திராவிட மொழி-கண்டுபிடிப்பு.pdf/148

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

146 என்பது . மூதுரைப்பாடல். மண்நீர் (மண்ணிர்) என் றால், உடம்பைக் குளித்துக் கழுவித் தூய்மை செய்ய உத வும் நீர் என்று பொருளாம். கடல்நீர் அதற்கு உதவா தன்றோ? இன்னொரு அகச் சான்று கலித்தொகை என் னும் நூலிலிருந்து காண்போம்: 'மண்ணி மாசு அற்ற நின் கூழையுள்” (கலித்தொகை: 107 - 31) என்னும் தொடரின் பொருள்; குளித்துக் கழுவி அழுக்கு போக்கித் தூய்மை செய்த நின் கூந்தல் - என்பதாம். மண்ணினால் மாசு (அழுக்கு) அறும் எனத் தெளிவான பொருளில் சொல்லாட்சி அமைந்துள்ளது. இன்னும் ஒரு சொல்லாட் சியை இங்கே காணலாம். கோதுமை-கோதும்பை: 1982 மார்ச்சு முதல் நாள் தஞ்சைத் தமிழ்ப் பல் கலைக் கழகத்தின் தொகுப்பியல் துறைத்தலைவனாகவும் பேராசிரியனாகவும் யான் பணி தொடங்கினேன். எனக்குப் பணி தந்த என் வனக்கத்திற்கு உரிய துணைவேந்தர் உயர்திருவி.ஐ.சுப்பிரமணியனார் அவர்கள்,எதைத்தொகுப் பது என்று தேர்ந்தெடுக்கும் உரிமையை எனக்கே வழங்கி விட்டார்கள். மர இனப் பெயர்களை முதலில் தொகுக்க லாம் என்றேன் நான். ஐயா அவர்கள் அதற்கு அன்போடு ஒப்புதல் அளித்தார்கள்.எனது பணிக்கு வேண்டிய ஒரு நூலும் தமிழ்ப் பல்கலைக் கழகத்தில் இல்லாத நிலையில், யான் புதுச்சேரியிலிருந்து நாற்பது அகர முதலிகள் கொண்டுபோய் வைத்துப் பணி தொடங்கினேன் அப் போது யான் அறிந்த சுவையான செய்தி ஒன்றை இங்கே தருகிறேன். கோதுமை’ என்பதைத் தென்னார்க்காடு மாவட்டப் பகுதியிலும் அதன் நடுவே உள்ள புதுச்சேரியிலும் கோதும’ என்று கொச்சையாகப் பேச்சுத் தமிழில் சொல்