பக்கம்:தொல் திராவிட மொழி-கண்டுபிடிப்பு.pdf/150

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

148 யும் யான் கொண்டு சென்ற நூல்களிலிருந்து பெறப்பட் டவை யாகும். யான் கிண்டல் செய்த தென் தமிழ் நாட்டுப் பேச்சு வழிக்காகிய கோதம்ப' என்பது, மலையாளத்தில் கோதம்ப' என்னும் எழுத்து வழக்காகும்.எனவே எனது கிண்டலில் பொருள் இல்லை. மற்றும் கோதுமைக்குக் கோதி என்னும் பெயரும் உள்ளதாகத் தமிழ் நிகண்டு கள் கூறுகின்றனவே - அந்த வழக்கு, கன்னடத்திலும். கோதி’ என உள்ளது. அடுத்து, பேச்சுத் தமிழில் உள்ள கோதும’ என்னும் கொச்சை வழக்கு, தெலுங்கில் கோதும’ என எழுத்துத் தெலுங்காக உள்ளது. இத் தகைய அமைப்பு, நான்கு மொழிகட்கும் உள்ள ஒற்று மையை உணர்த்தும் சுவையான செய்தியன்றோ? இன் னும் இவ்வாறு பல்வேறு சொற்சுவைகளைக் காணலாம். துளுவம்(துளு) துளு மொழியில் உள்ள அண்ணே, அக்கா, கால், கை, கண், தின், உண் - முதலிய சொற்கள் திரியாமல் தமிழே போல் இருப்பது வியப் பளிக்கிறது. மற்ற திராவிட, மொழிகளிலும் ஒத்த ஒலிப்புடைய சொற்கள் நிரம்ப உள்ளன. தொல் திராவிட மொழி 4. இதுகாறுங் கூறியவற்றால் அறிய வேண்டுவன:பேச்சுத் தமிழும் எழுத்துத் தெலுங்கும் எழுத்துக் கன்னட மும் எழுத்து மலையாளமும் எழுத்துத் துளு மொழியும் ஆகியவற்றிலுள்ள ஆயிரக்கணக்கான சொற்கள் பெரும் பாலும் ஒலிப்பில் ஒத்துள்ளன. ஒலிப்பில் உள்ள சிறு சிறு வேற்றுமையை இங்கே பொருட்படுத்த வேண்டா. பேச்சுத் தமிழ் (அதாவது கொச்சைத் தமிழ்) பிற எழுத்துத்