பக்கம்:தொல் திராவிட மொழி-கண்டுபிடிப்பு.pdf/151

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

149 திராவிட மொழிகளோடு ஒத்திருக்க, எழுத்துத் தமிழ் மட்டும் ஒலிப்பில் வேறுபட்டுள்ளது. தொடக்கத்தில் இருந்த மொழியின் ஒலிப்பு முயற்சியை நாளடைவில் குறைத்துக் கொண்டே வருவது மக்கள் இயற்கை, தலை என்னும் எழுத்துத் தமிழை ஒலிக்கச் செலவாகும் முயற்சி யினும், தல, தலெ என்னும் சொற்களை ஒலிக்கும் முயற்சி குறைவு. எனவே, தலை என்னும் ஒலிப்புடைய எழுத்துத் தமிழ் மொழியே மற்ற திராவிடமொழிகளின் முதன்மைத் தாய்மொழியாகும்-அதாவது - தொல்திராவிட மொழி யாகும் என்பதைத் தயங்காமல் சொல்லலாம் - ஏற்றுக் கொள்ளலாம். t தமிழைத் தாய் மொழியாகக் கொண்ட சிலரும், பிற திராவிட மொழிகளைத் தாய்மொழியாகக் கொண்ட பலரும் எழுத்துத் தமிழைத் தொல் திராவிடமொழி என ஏற்றுக் கொள்ள மறுக்கின்றனர். பிற திராவிட மொழிக்காரர்கள், எழுத்துத் தமிழே தொல் திராவிட மாகும் என்பதை ஏறறுக் கொண்டால் தங்கள் தாய் மொழியின் மதிப்பு குறையும் என எண்ணுவதாகத் தெரி கிறது. தாய் மொழிப்பற்று இருக்கலாம். அதற்காக உண்மையை ஒத்துக்கொள்வதற்கு வெட்கப் படலாகாது -கூச்சப்படலாகாது - தாழ்வு மனப்பான்மை கூடாது. மற்றோர் உண்மையையும் இங்கே மறத்தலாகாது. தமிழைத் தாய் மொழியாக உடையவர்கள் எங்கள் தமிழி லிருந்து தான் பிற திராவிடமொழிகள் பிறந்தன என்று அடித்துப் பேசலாகாது. சுந்தரம்பிள்ளையின் மனோன் மணிய நூலின் தமிழ் வாழ்த்துப் பாடலிலுள்ள 'கன்னட மும் களி தெலுங்கும் கவின்மலை யாளமும் துளுவும் உன்னுதரத்துதித்தெழுந்தே ஒன்றுபல ஆயிடினும்.”