பக்கம்:தொல் திராவிட மொழி-கண்டுபிடிப்பு.pdf/152

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

150 என்னும் பகுதியைப் பாடி மகிழ்வதோடு நிறுத்திக் கொள்ள வேண்டும். எந்த மொழியும் இன்னொரு மொழியிலிருந்து குழந்தைபோல் பிறப்ப தில்லை. ஒரு காலத்தில் குறிப் பிட்ட பகுதியில் ஒரே மொழி இருந்திருக்கலாம். அந்தப் பகுதியிலேயே - ஆங்காங்கு மக்களது பேச்சு வழக்கில் மாறுதல் ஏற்படவே, ஒரு மொழியே பல கிளை மொழி களாகும். நாளடைவில் ஒலிப்பில் சிறு சிறு மாறுதல் ஏற்பட்ட கிளை மொழிகிள் தனித்தனி மொழிப் பெயர் பெறும். இந்தப் பொது விதியைத் திராவிட மொழிகட் கும் பொருத்திக் கொள்ளவேண்டும். தலைமைக் காரணம் தென்னிந்திய்ா முழுதும் வழங்கப்பெறும் மொழிக்குத் தமிழ் அல்லது தெலுங்கு அல்லது கன்னடம் அல்லது மலையாளம் அல்லது துளு என எந்தப் பெயர் வேண்டு மானாலும் கொடுக்கலாம். இருப்பினும், பேச்சுத் தமிழும் மற்ற எழுத்துத் திராவிட மொழிகளும் ஒலிப்பில் ஒத்திருப் பதால், எழுத்துத் தமிழுக்குத் தலைமை கொடுக்கப்படு கிறது. எழுத்துத் தமிழோ இற்றைக்கு (1988) மூவாயிரம் ஆண்டுகட்கு முன்பே அப்போது பேசப்பட்ட ஒலி வடிவத் தில் எழுதப்பட்டது. மற்ற எழுத்துத் திராவிட மொழி களோ, ஏறக்குறைய இற்றைக்கு (1988) முன்பு ஆயிரம் ஆண்டுகட்குள்தான் அவ்வப்போது பேசப்பட்ட வடிவத்தில் எழுதப்பெற்றன. இதனாலும் தமிழுக்குத் தலைமை தரப் படுகிறது. எல்லா மொழிகளிலும் உள்ள எல்லா இலக்கியச் சொற்களும் எழுதப்படுவதற்கு முன், எங்கோ ஒரு மூலையிலாவது பேசப்பட்டவையே.