பக்கம்:தொல் திராவிட மொழி-கண்டுபிடிப்பு.pdf/158

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

156 இந்த எழுத்துகளை ஏற்றுக் கொள்ளவேண்டும்; இல்லை யேல் இவ்வொலிகட்கு ஏற்ற புதிய எழுத்து வடிவங்களை படைத்துத் தமிழில் சேர்த்துக் கொள்ள வேண்டும். அறி ஞர்கள் ஆய்க! 'F' என்பதற்கும் தமிழில் புதிய வடிவம் படைக்க வேண்டும். தமிழ் தனித்து இயங்கும். ஆனால், தெலுங்கு, கன்ன டம். மலையாளம் ஆகியவை தனித்து இயங்க முடியாத அளவுக்குச் சமசுகிருதச் சொற்களை ஏற்றுக்கொண்டுள் ளன. தெலுங்கிலும் கன்னடத்திலும் விளக்கு என்பதைக் குறிக்கத் தீபம்’ என்னும் சமசுகிருதச் சொல்லே உள்ளது. அதை நீக்கிவிடின், அம்மொழிகள் தமிழ்ச் சொல்லைத் தான் நாட வேண்டிவரும். இம்மூன்று (தெ - க - ம) மொழிகளிலும் வேறு வழியில்லாமல் ஏற்றுக்கொண்டுள்ள சமசுகிருதச் சொற்கள் சிலவற்றின் பட்டியல் வருமாறு;