பக்கம்:தொல் திராவிட மொழி-கண்டுபிடிப்பு.pdf/170

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

168 (ஆப்ப ரேஷன்) மருத்துவத்திற்குத் தொல் திராவிட மொழியில் தக்க ஆதாரம் இருக்கலாம் எனச் சில வேளை களில் கருதுவதாகத் தோன்றுகிறது. சொற்களின் அடிவேர்ப் பகுதிகளை ஆராய்வதிலும் அதற்குத் தொல் திராவிட மொழி கிடைப்பின் துணை புரியும் என எண்ணுவதிலும் காலத்தையும் முயற்சியையும் கொன்னே கழிக்கின்றனர். மொட்டைத் தலைக்கும் முழங்காலுக்கும் முடிச்சு போடுவது போலவும், அமா வாசைக்கும் அப்துல் காதருக்கும் தொடர்பு காட்டுவது போலவும், ஒன்றுக் கொன்று தொடர்பில்லாத சில சொற் களைத் தொடர்புடையன போல் இணைத்துக் கொண்டு, அவற்றிற்குப் பொதுவான ஒரு வேர்ச் சொல் - ஒர் அடிச் சொல் எடுத்துக் காட்டுகின்றனர்; அந்த அடிச் சொல்லி லிருந்துதான் குறிப்பிட்ட மற்ற சொற்கள் தோன்றின என்றும் கூறுகின்றனர். உளவியல் முறை: இங்கே ஓர் அடிப்படை உண்மையை அறிந்து கொள்ள வேண்டும். தொடக்கத்தில் மொழி பேசியவர்கள் எந்த ஒரு வேர்ச் சொல்லையும் அடிப்படை யாகக் கொண்டு சொற் களை உண்டாக்கி மொழி பேசவில்லை. எழுத்தா லானது சொல்-சொல்லால் ஆனது சொற் றொடர்-என்னும் கார ண காரிய (Logic Method)முறையில் ஆராய லாகாது. சொற்றொடரிலிருந்து சொல்லுக்கும் சொல்லிலிருந்து அடிவேருக்கும் போகும் உளவியல் முறையே(Psychological Method) உண்மையானது-இயற்கையானது. தொடக்கக் காலத்தில் மக்கள், 'அ.ம்...மா’’ என எழுத்து எழுத்தாகப் பேசியிருக்கமாட்டார்கள். மற்றும், 'அம்மா...... சோறு. போடு” எனச் சொல் சொல்லாகவும்