பக்கம்:தொல் திராவிட மொழி-கண்டுபிடிப்பு.pdf/171

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

169 பேசியிருக்க மாட்டார்கள். 'அம்மா சோறு போடு” எனச் சொற்றொடராகவே (வாக்கியமாகவே)பேசியிருப்பர். தனி எழுத்துக்குப் பொருளோ-மதிப்போ இல்லை; அது சொல் லில் சேர்ந்த போதுதான் மதிப்பு பெறுகிறது.இதுபோலவே தனிச்சொல்லுக்கும் மதிப்பு இல்லை;அது சொற்றொடரில் சேர்ந்த போதுதான் மதிப்பு பெறுகிறது. இப்போதும் மக்கள் சொற்றொட ராகத்தான்பேசுகின்றனர். சிலவேளை யில், அம்மா’ என்று ஒரு சொல் மட்டும் கூறினால், 'அம்மா சோறு போடு - அம்மா காசு கொடு - என்பன போல் ஏதோ ஒரு சொற்றொடரே அடங்கியிருப்பதாகப் பொருள் கொள்ளல் வேண்டும்,'தண்ணிர்’ என்று கூறினால் 'குடிக்கத் தண்ணீர் கொண்டுவா’ என்ற சொற்றொடர் அதில் மறைந்திருப்பதைச் சில வேளையில் அறியலாம். எனவே, சொற்றொடரிலிருந்து சொல்லுக்குப் போதல் வேண்டும். இயற்கைத் தோற்றம் மக்கள் இயற்கையாகப் பேசிய சொற்களில் தற்செய லாக ஒரு பொது அடிச்சொல் அமைந்து கிடக்கிறது. அடுப்பு, அடுக்களை, அடிசில், அடை, ஆடு (சமையல்) என்னும் சொற்கள் ஆங்காங்கிருந்த மக்கள் இயற்கை யாகப் பேசியவை. இதன் வேர்ச் சொல்லாக அடு' என்பதைச் சொல்லலாம். அடுதல் என்றால் சமைத்தல். 'அடுதல் கோறல் சமைத்தலும் ஆகும்”. என்பது திவாகர நிஆண்டு நூற்பா. குறிப்பிட்ட மக்கள் சிலர் ஒன்று சேர்ந்து கூட்டம் போட்டு, அடு’ என்னும் வேர்ச் சொல்லிலிருந்து என்னென்ன சொற்கள் உருவாக் கலாம் என்று கலந்து பேசிப் பின்னர் அடுப்பு,அடுக்களை, அடிசில், அடை, ஆடு ஆகிய சொற்களை உருவாக்க