பக்கம்:தொல் திராவிட மொழி-கண்டுபிடிப்பு.pdf/172

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

170 வில்லை. ஒரு வேர்ச் சொல்லிருந்து பிறந்ததாகக் கருதப் படும் வேறு சொற்களும் இத்தகைய முறையில் இயற்கை யாகத் தோன்றியவையே. கிளைகளின் தொகுப்பு: தென்னிந்தியாவில் உள்ள பல திராவிட மொழிகட் கும் பொதுவான தொல் திராவிட மொழி (எழுத்துத் தமிழ்) எவ்வாறு தோன்றியிருக்க முடியும். அந்தந்த வட்டாரத்தில் மக்கள் ஒவ்வொரு விதமாகப் பேசி வந்த னர். தொடர்புடைய இந்த வட்டார மொழிகள் கிளை மொழிகள் எனப்படும். பல வட்டாரங்களைச் சேர்ந்தவர் கள் பயன் கருதி ஒன்று சேரும் போது எல்லா வட்டார மொழிகளும் கலந்துவிடுகின்றன. எனவே, பல கிளை மொழி களின் தொகுப்பே ஒரு பொது மொழி எனலாம். ஒரு பொருள் பல் பெயர்கள்: ஒரே பொருளுக்குப் பல பெயர்கள் தோன்றியது எவ்வாறு? ஒரு வட்டாரத்தினர் மலை’ என்றனர்; இன் னொருவர் வரை' என்றனர்; மற்றொருவர் வெற்பு என்றனர். ஒரு பகுதியினர் கடல்’ என்றனர். இன் னொருவர் 'ஆழி என்றனர்; மற்றொருவர் புணரி என்றனர். இவ்வாறே ஒரு பொருளுக்குப் பல பெயர்கள் ஏற்பட்டன. எல்லாப் பகுதியினரும் கலந்துவிட்டபோது ஒரே பொருளைக் குறிக்கும் ஒரு பொருள் பல் பெயர்கள் ஏற்பட்டன. ஒரு சொல் பல் பொருள்கள்: ஒரு பகுதியினர் கப்பலைக் கலம் என்றனர்; இன் னொருவர் உண்ணும் பாத்திரத்தைக் கலம் என்றனர்; மற்றொருவர் நகையைக் கலம் (அணிகலம்) என்றனர்;