பக்கம்:தொல் திராவிட மொழி-கண்டுபிடிப்பு.pdf/175

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

17.3 இயற்கையாகப் பேசிய அச்சொற்களைக் கண்டதும், நாமாக விள் - வெள் - விள் - வெள் எனச் செபம் செய் கிறோம் - உருவேற்றுகிறோம். சொற்பொழிவாளர் பேசி முடித்ததும், யான் எழுந்து, வெளக்கு விளக்காக வில்லை - விளக்குதான் வெளக்கு ஆயிற்று என்று சில கூறி விளக்கினேன். யான் அமர்ந்த தும், மேலும் சிலர், வெளக்கு என்பதுதான் விளக்கு ஆயிற்று என்று சொற்பொழிவாளரின் கருத்தை ஏற்றுக் கொண்டு, அவர் புதிய புரட்சியான ஆராய்ச்சி செய்துள் ளார் என்று கூறி அவரைப் பாராட்டவும் செய்தனர். மொழியியல் ஆய்வின் பேரால் நடக்கும் தமிழ்க் கொலையை எண்ணி யான் வேதனை யடைந்தேன். பின்னர் வேறொரு நாள் நடந்த கருத்தரங்கில், ஒரு வர், வெளக்கு என்பதே விளக்கு என்றாயிற்று எனக் கூறிப் பழைய குப்பையைக் கிளறினார். ஏதோ பேச்சுப் போக் கில் இதை அவர் கூற நேரிட்டது. உடனே நான் எழுந்து பேசுகையில், விளக்கு என்பதே வெளக்கு என்றாயிற்று என்னும் என் கருத்தை அடித்துப் பேசி அனைவரையும் ஏற்றுக் கொள்ளச் செய்ய முயன்றேன். எனது கருத்துக்கு உரிய உண்மையான - அடிப்படையான - இயல்பான சான் றினை இங்கேயும் தருகிறேன்; அது வருமாறு: 'இ’ என்பதோ, அல்லது மெய்களின்மேல் இ’ ஏறிய உயிர்மெய் எழுத்துகளாகிய கி,சி,திநி,பி,மி,வி என்னும் மொழிமுதலில் வரும் எழுத்துகளுள் ஒன்றோ ஒரு சொல் லின் முதல் எழுத்தாக இருக்கவேண்டும்; அச்சொல்லின் இரண்டாவது எழுத்தாக, மெய்யெழுத்துகளில் அ, ஆ,ஐ என்னும் மூன்று உயிர்களும் ஏறிய உயிர்மெய் எழுத்துகளா கிய க, கா, கை-ச,சா,சை-ட,டா, டை - ண,ணா, ணை-த