பக்கம்:தொல் திராவிட மொழி-கண்டுபிடிப்பு.pdf/177

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

175 வேண்டுமானால், இதற்கு இணை - துணைச் சான் றாக, இதனோடு ஒத்த இன்னொரு வகை வழக்காற்றை யும் ஈண்டு தருவேன் - அஃதாவது: 'உ' என்பதோ, அல்லது, மெய்களின் மேல் 'உ' ஏறிய உயிர்மெய் எழுத்துகளாகிய கு,சு,து,து,பு,மு என்னும் மொழி முதலில் வரும் எழுத்துகளுள் ஒன்றோ ஒரு சொல் யின் முதல் எழுத்தாக இருக்கவேண்டும். அச்சொல்லின் இரண்டாவது எழுத்தாக, மெய்யெழுத்துகளின் மேல் அ, ஆ,ஐ, ஏறிய உயிர்மெய் எழுத்துகளுள் ஏதாவது ஒன்று இருப்பின், மொழி முதலில் உள்ள 'உ' என்பது 'ஒ'எனத் திரியும். இது கொச்சைப் பேச்சு உருவமாகும். இதற்கு எடுத்துக் காட்டுகள் வருமாறு: உழவு=ஒழவு. உலாத்துதல்=ஒலாத்தல். உடை=ஒட. குழவி=கொழவி.குழாய்=கொழா. குழை=கொழ. சுடலை =சொடல.சுறா =சொறா.சுனை=சொனதுடை=தொட. துலாம்=தொலாம் துணை=தொண. நுகத்தடி = நொகத் தடி. நுணா = நொணா. நுரை = நொர. புலம்பு= பொலம்பு புறா=பொறா. புகை= பொக. முழம்=மொழம்.முலாம்= மொலாம்.முனை=மொன. இவ்வாறு இன்னும் பல காட்ட லாம். பேச்சு வழக்கில் உள்ள சொற்களே இவ்வாறு திரி யும். 'உ' என்பது ஒ ஆகத்திரிந்தது போலவே, இ என்பது 'எ' ஆகத்திரிந்தது. எனவே, விளக்கு என்பது வெளக்கு எனத் திரிந்ததே தவிர, வெளக்கு என்பது விளக்கு எனத் திரிய வில்லை. போதை: வேர்ச்சொல் ஆராய்ந்து காணும் மொழியியல் அறிஞர்கள் அந்த ஆராய்ச்சியில் சுவை காண்கின்றனர். அந்தச் சுவையைக் கெடுக்க நான் விரும்பவில்லை. அந்த