பக்கம்:தொல் திராவிட மொழி-கண்டுபிடிப்பு.pdf/178

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

176 ஆராய்ச்சி. குறிப்பிட்ட சொல் எந்த மொழிக் குடும் பத்தைச் சேர்ந்தது என்று கண்டுபிடிக்க உதவலாம். மற் றும், ஒரு சொல்லைச் சரியான வடிவத்தில் அமைத்துக் காணவும் துணைபுரியலாம் ஆனால், மொழி ஆராய்ச்சி யாளர்க்கு மகிழ்ச்சிப் பயன் கிடைப்பதைத் தவிர, மற்ற படி, மன்பதைக்கு-மக்கள் சமுதாயத்திற்குக் காது அற்ற ஊசிக்கும் பயன் இல்லை என்பதையும் ஈண்டு சொல்லித் தான் தீரவேண்டும். வேர்ச் சொல் ஆராய்ச்சி ஒரு சிலர்க்கு ஒருவகைப் போதையாகும்.