பக்கம்:தொல் திராவிட மொழி-கண்டுபிடிப்பு.pdf/179

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

177

மலையாளம் தாயா-சேயா?

இது நிற்க, இங்கே இன்னொரு செய்தியைக் குறிப்பிட்டு ஆய்வு செய்ய வேண்டியது மிகவும் இன்றியமையாத தாகும். தொல் திராவிட மொழி, எழுத்துத் தமிழ் மொழி தான்-என்று நாம் கூறும் இதே நேரத்தில், மலையாளத திலிருந்துதான் தமிழ் பிறந்தது என்று ஆராய்ச்சியாளர் சிலர் கூறுவது நினைவுக்கு வருகிறது. இதனையும் ஆய்ந்து இதற்கு நாம் மறுப்புப் பதில் சொல்ல வேண்டும்:

தாயா - சேயா?

மலையாளத்திலிருந்து தான் தமிழ் பிரிந்தது என்று கூறுவது நம் கொள்கைக்கு மிகவும் அரண் செய்கிறது; அதாவது, இரண்டின் நெருக்கமான பிணைப்பை அறிவிக் கின்றது. தமிழிலிருந்து மலையாளம் பிரிந்தது என்றோமலையாளத்திலிருந்து தமிழ் பிறந்தது என்றோ சொல்ல. வேண்டிய தில்லை. ஒரு காலத்தில் இரண்டு பகுதிகளிலும் ஒரே மொழி பேசப்பட்டு வந்தது. இப்போதைய தமிழ் நாட்டுப் பகுதியில் பேசப்பட்டது ‘தமிழ்’ என்னும் பெயராலும், இப்போதைய மலையாளத்தில் பேசப்பட்டது மலை நாட்டுத் தமிழ் - மலையாளத் தமிழ் - மலையாண்மை என்றெல்லாமும் பெயர் வழங்கப்பட்டன. இங்கே, மலையாள நாடு என்பதையும் மீண்டும் நினைவுகூர வேண்டும். முன்னர்க் குறிப்பிட்டுள்ள பல்வேறு காரணங்களால்,பிறந்து அன்று - பிரிந்து தனிக் குடும்பம் செய்யத்தொடங்கியது. இதனால் தான், இதிலிருந்து அதுவோ - அதிலிருந்து இதுவோ பிறந்தது என்று சொல்லலாகாது. தாய் சேய் முறை கிடையாது.