பக்கம்:தொல் திராவிட மொழி-கண்டுபிடிப்பு.pdf/183

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

181

பல்வேறு மலைப் பகுதிகளில் எழுத்தே யில்லாத திராவிடக் குடும்ப மொழிகள் பேசி வாழும் நாகரிக மற்றவர்களின் மொழிகள் கூடத்தான் கொச்சை வடிவத்தில் உள்ளன. இந்த மொழிகளிலிருந்து தமிழ் பிறந்தது என்று கூறுவதா? மலையாளத்திலிருந்து தமிழ் பிறந்தது என்பதும் இதுபோலவே பொருந்தாக் கூற்றாகும்.

ஆங்கில ஒப்புமை:

ஆங்கிலத்தில் I go, we go, you go, you go, they go எனத் தன்மை ஒருமைக்கும் பன்மைக்கும் முன்னிலை ஒருமைக்கும் பன்மைக்கும் படர்க்கைப் பன்மைக்கும் நிகழ்காலத்தில் ‘go’ என்னும் ஒரே வினை முற்று உள்ளது. He goes, she goes, it goes மட்டும் நிகழ்காலத்தில் goes என்பது பொதுவினை முற்றாக உள்ளது. படர்க்கை ஒருமைக்கு மட்டும் இவ்வாறு வேறுபட்டிருப்பதை டச்சுக்காரர்கள் (ஃஆலந்துக்காரர்கள்) குறை சொல்லுவார்களாம்.

தமிழில் உள்ள, நீ, நீங்கள் என்னும் முன்னிலை ஒருமைக்கும் பன்மைக்கும் ஆங்கிலத்தில் you என்னும் ஒரே சொல் பயன்படுகிறது. தமிழில் ஒருவரையே சிறப்பு (மரியாதை) கருதி நீங்கள் எனக் குறிப்பிடுவதை ஆங்கிலேயர்-ஐரோப்பியர் சிலர் குறை கூறுகின்றனராம். மக்களுக்குள் உயர்வு தாழ்வுப் பாகுபாடு எதற்கு? எல்லாரையும் சமமாக நீ அல்லது நீங்கள் என்னும் ஒரு சொல்லால் குறிப்பிடுவதே முறை-என்று கூறுகிறார்களாம். ஆங்கிலத்திலும் இத்தகைய குறைபாடு ஒன்று உள்ளது என் பதை அவர்கள் மறந்து விட்டனர். எப்பேர்ப்பட்டவர் களையும் he (அவன்), She (அவள்) என்னும் ஒரு மைச் சொல்லால் குறிப்பிடினும், கடவுளைக் குறிக்கும் போது Him, His எனப் பெரிய H எழுத்து இட்டு எழுதுகின்