பக்கம்:தொல் திராவிட மொழி-கண்டுபிடிப்பு.pdf/184

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

182 றனர். மக்களுள் உயர்ந்த துறவியர் பற்றி எழுதும்போது His Holiness எனப் பெரிய H எழுத்தைப் பயன்படுத்து கின்றனர். உயர்ந்த நாடாளும் தலைவர்களைப் பற்றிக் Golijóñárá), His Highness His Excellency granto Quñu H எழுத்தை எழுதுதுகின்றனர். எனவே, தமிழில் ஒருவரை நீங்கள் எனச் சிறப்புப் பன்ைைமயால் குறிப்பிடுவதில் குறைவு இல்லை. எனவே, இத்தகைய அமைப்புகளைக் கொண்டு, மொழிகட்கு உயர்வு தாழ்வோ - பழமை புதுமையோ கற்பித்தலாகாது. தமிழிலும் பொதுமை அவ்வளவு ஏன்? தமிழிலும் இத்தகைய பொதுமை இருப்பதை மறப்பதற்கில்லை. தமிழகத்தில் சில பகுதி களில், பேச்சு வழக்கில். அம்மா வந்தது, அப்பா சொல் லிச்சி, அத்தை வந்தது, மாமா கொடுத்தது, அக்கா சொல்லிச்சி, அண்ணன் சொல்லிச்சி, தம்பி சொல்லிச்சி, தங்கச்சி சொல்லிச்சி, நாத்தனார் சொல்லிச்சி, கொழுந் தனார் சொல்லிச்சி, கொழுந்தியாள் சொல்லிச்சி, மருமகன் சொல்லிச்சி, மருமகள் சொல்லிச்சி, ஆயா சொல்லிச்சி, ஜனங்கள் கூடிச்சி, மாடுகள் கூடிச்சி, கிளிகள் பேசிச்சி-என் றெல்லாம், உயர்திணை-அஃறிணை, ஆண்பால்-பெண்பால், ஒருமை-பன்மை ஆகிய எல்லாவற்றையும் அஃறிணைஒருமைப் படர்க்கை வினைமுற்றால் குறிப்பிடும் வழக்காறு கள் உள்ளன. இவ்வாறு, அத்தை சொல்லிச்சி, மாமா சொல்லிச்சி, அக்கா சொல்லிச்சி, அண்ணன் சொல்லிச்சி, பாப்பா சொல்லிச்சி, ஆயா சொல்லிச்சி என்றெல்லாம் பொதுமை வினைமுற்றுப் போட்டுப் பேசும் வழக்காறு இன்றும் எங்கள் குடும்பத்திலும் உண்டு. ஒருவேளை, எங்கள்