பக்கம்:தொல் திராவிட மொழி-கண்டுபிடிப்பு.pdf/186

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

184 வியங்கோள் தமிழில், நான் வாழ்க-வாழிய-வாழியர், நாம் வாழ்கவாழிய-வாழியர், நீவாழ்க-வாழிய-வாழியர், அவன், அவள், அவர், அது அவை வாழ்க-வாழிய-வாழியர் என, வாழ்க, வாழிய, வாழியர் என்னும் மூன்று வினை முற்றுகளும் எல்லாத்திணை - பால், எண்-இடம் ஆகிய வற்றிற்கும் பொதுவாய் வரும். "கயவொடு ரவ்வொற் lற்ற வியங்கோள் இயலும் இடம்பால் எங்கும் என்ப" என்பது நன்னூல் நூற்பா (338). - நன்னூலார், வியங்கோள் வினை முற்று தன்மை, முன் னிலை, படர்க்கை ஆகிய எல்லா இடங்கட்கும் வரும் என்று கூறியிருப்பினும், அவருக்கு ஏறக்குறைய இரண்டா யிரம் ஆண்டுகட்கு முற்பட்ட தொல்காப்பியரோ,தன்மை, முன்னிலை ஆகிய இரண்டிற்கும் வியங்கோள் வினைமுற்று வராது;படர்க்கைக்கு மட்டுமே வரும் என்று கூறியுள்ளார்: 'முன்னிலை தன்மை ஆயி ரிடத்தொடும் மன்னா தாகும் வியங்கோள் கிளவி’ என்பது தொல்காப்பிய நூற்பா (226). வியங்கோள் வினைமுற்று படர்க்கைக்கு மட்டுமே வரும் என்று தொல்காப்பியர் கூறிய காலத்திற்கு இரண் டாயிரம் ஆண்டு காலத்திற்குப் பின், பவணந்தியார் தம் நன்னூலில், தன்மை, முன்னிலை, படர்க்கை ஆகிய எல்லா இடத்திற்கும் பொதுவாய் வியங்கோள் வரும் என்று கூறி யிருப்பதால், நன்னூலார் காலத்துத் தமிழிலிருந்துதான் தொல்காப்பியர் காலத் தமிழ் பிறந்தது என்று கூற முடி யுமா? மலையாளத்தில் ஒரே வினைமுற்று எல்லாவற்றிற்