பக்கம்:தொல் திராவிட மொழி-கண்டுபிடிப்பு.pdf/187

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

185 கும் பொதுவாய் வரும்; எனவே, மலையாளத்திலிருந்தே தமிழ் பிறந்தது என்று கூறுவதும் இது போன்றதே. மற்றும் சில: - மற்றும் சில பொதுமை காண்பாம் :- யான் இல்லை, யாம் இல்லை, நீ இல்லை, நீயிர் இல்லை, அவன் இல்லை, அவள் இல்லை, அவர் இல்லை, அது இல்லை, அவை இல்லை; யான் - யாம் - நீ - நீர் - அவன் - அவள் - அது -அவை என்பவற்றோடு வேறு, செய்ம்மன என்பவற்றை யும் சேர்த்து நான் வேறு, நான் செய்ம்மன என எல்லா வற்றிற்கும் கூறலாம். (செய்ம்மன - செய்வன). இந்த, அமைப்பு தொல்காப்பியத்தில் உள்ளது. வேறு, இல்லை, உண்டு என்னும் மூன்றும் இருதிணை ஐம்பால் மூவிடத் திற்கும் வரும் என்பது நன்னூல் கூறுவது. 'முன்னிலை வியங்கோள் வினையெஞ்சு கிளவி இன்மை செப்பல் வேறென் கிளவி செய்ம்மன செய்யும் செய்த என்னும் அம்முறை நின்ற ஆயெண் கிளவியும் திரிபு வேறுபடுஉம் செய்திய வாகி இருதிணைச் சொற்கும் ஒரன்ன உரிமைய (222) '(முன்னிலை வியங்கோள் நீங்கி) எஞ்சிய கிளவி இடத்தொடு சிவணி ஐம்பாற்கும் உரிய தோன்ற லாறே' (225) என்பன தொல்காப்பிய நூற்பாக்கள். "வேறு இல்லை உண்டு ஐம்பால் மூவிடத்தன” என்பது நன்னூல் நூற்பா (33) - இவ்வாறு தமிழிலும் பொதுமை வினைமுற்றுகள் L_l ©) உள்ளன. எனவே, பொதுமை வினைமுற்றுகளைக் கொண்