பக்கம்:தொல் திராவிட மொழி-கண்டுபிடிப்பு.pdf/190

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

188 கால்டுவெல் கருத்து: திராவிட மொழிகளின் ஒப்பிலக்கணம் எழுதிய டாக்டர் கால்டுவெல், தவறான செய்திகள் சில கூறியிருப்பினும், தொல் திராவிட மொழி பற்றிய அவர் கருத்தையும் ஈண்டு காண்பாம். கால்டுவெல் ஆங்கிலத்தில் எழுதியுள்ள Compa – rative Grammar of Dravidian Languages” as org)|th நூலை, தமிழகச் சட்ட மன்றத்தின் முன்னாள் தலைவர் உயர் திரு புலவர் கா.கோவிந்தன் எம்.ஏ.அவர்கள்,'திரா விட மொழிகளின் ஒப்பிலக்கணம்” என்னும் பெயரில் தமிழில் முழுமையுமாக மொழி பெயர்த்துள்ளார்கள். 1959 - ஆம் ஆண்டு வெளியான அம் மொழி பெயர்ப்பு நூலின் 105 ஆம் பக்கத்தில் உள்ள 'திராவிட இனத்தைச் சேர்ந்த மொழிகளில், அவற்றின் தொன்மை நிலையைத் தெளிவுற உணர்த்தும் மொழி எது’ என்னும் தலைப்பின்கீழ்த் தரப்பட்டுள்ள ஒரு செய் தியை அதில் உள்ளவாறு அப்படியே தருகிறேன்: 'செந்தமிழ் என்று பெயரிட்டு அழைக்கப்பெறும் தமிழ் மொழியின் இலக்கியத் தமிழ், திராவிடப் பழங்குடியினர் வழங்கிய தொன்மொழியின் நிலையினைத் தெளிவுற உணர்த்துகிறது என்று சிலர் கருதுகின்றனர். செந்தமிழின் பெரு மதிப்பைக் குறைத்துக் கூறாமலே, திராவிட மொழி யின் தொன்மை நிலையைத் தெளிவுறக் காட்டும் கண் ணாடியாம் தனித் தகுதி,தனி.எம்மொழிக்கும்இல்லைஎன்றே நான் கருதுகின்றேன்... ... என்றாலும்,திராவிடமொழி யின் தொன்மை நிலையை நிலைநாட்டப் பேரளவில் பெறலாகும் துணையினைச் செந்தமிழே அளிக்கிறது என்பது மறுக்க முடியாத உண்மையாகும். இது திராவிட