பக்கம்:தொல் திராவிட மொழி-கண்டுபிடிப்பு.pdf/21

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

19

எழுத்து வடிவம் பெற்ற மொழிகளைக் குறிப்பிட்ட இலக்கண விதிகளை மையமாகக் கொண்டு எழுதியும் பேசியும் வராமல், எழுதுவது வேறு - பேசுவது வேறு என்ற நிலையில் கையாண்டுவரின் மீண்டும் மொழி பிரிய வாய்ப்பு உண்டு. எனவே, குறிப்பிட்ட இலக்கண விதிகளை மையமாகக் கொண்டு எழுத்து நடையை ஒட்டியே பேச்சு நடையும் இயன்றவரை இருக்க வேண்டும். பேசுவது போல் எழுதவேண்டும் என்று கூறும் 'மேதைகட்கு' இதை எண்ணிப்பார்க்க வேண்டிய கடமை உள்ளது.

எழுத்து நடையிலிருந்து பேச்சுநடை மாறக் கூடாது என்பதைத் தெளிந்தறியவும், திராவிட மொழிகட் கெல்லாம் பொதுவான-முதன்மையான-தூய்மையான தொல் திராவிட மொழி எது என்பதைக் கண்டு பிடிக்கவும், பின்வரும் நீண்ட சொல் அட்டவணையைக் காண்போமாக. இதில், ஏறக்குறைய இரண்டாயிரம் தொல் திராவிட மொழிச் சொற்களோடு ஒலிப்பில் ஒத்த பிற திராவிட மொழிச் சொற்கள் தரப்பட்டிருக்கும். இனி அவை வருமாறு: