பக்கம்:தொல் திராவிட மொழி-கண்டுபிடிப்பு.pdf/7

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

ஆசிரியர் முன்னுரை


மொழியியல் (Linguistics) என்பது, மொழி தொடர்பான ஒரு புதுக் கலை. இந்தக் கலை பயின்றவர்கள் மொழியலார் (Linguist) எனப் பெயர் வழங்கப் பெறுகின்றனர். இந்தக் கலை தமிழகத்திற்கு அறிமுகமானது இற்றைக்குமுன் ஐம்பது ஆண்டு காலத்திற் குள்ளேயாம் தமிழில் பட்டம் பெற்றவர்களேயன்றி, பெறாதவர்களும் இந்தக் கலையைப் பயின்று இந்தக் கலை தொடர்பான பட்டம் பெற்றுள்ளனர். இவர்கள் மொழியியலார் எனப்படுகின்றனர்.

பண்டு சமசுகிருதம் தமிழ் நாட்டிற்கு வந்ததும், அம்மொழி பயிலாத தமிழ் அறிஞர்கள் மட்டமாக மதிக்கப் பெற்றனர். பிற்காலத்தில் ஆங்கிலம் வந்ததும் அம்மொழி பயிலாத தமிழ் அறிஞர்கள் தாழ்த்தப்பட்டனர். இப்பொழுதோ, மொழியியல் பயின்று பட்டம் பெறாத தமிழ் அறிஞர்கள், மொழியியல் பட்டம் பெற்றவர்களால் இழிவாக எண்ணப்படுகின்றனர்.

மொழியியலார் ஒருவர், ஒருநாள், என்னிடம், தமிழ் இலக்கிய - இலக்கணப் புலமையில் மிகவும் வல்லுநரான பேராசிரியர் ஒருவரைக் குறிப்பிட்டு 'அவர் மொழியியல் அறியாதவர்' என்று கூறி மட்டப் படுத்திப் பேசினார் என்ன செய்வது!

மொழியியல் ஓர் ஐரோப்பிய இறக்குமதிச் சரக்கு. நாம் எத்தனையோ இறக்குமதிச் சரக்குகளை வாழ்க்கையில் கட்டாயத் தேவையாகக் கொண்டு பயன்படுத்தி வாழ்கின்றோம். இவ்வாறான கட்டாயத் தேவை மொழியியலுக்கு இல்லை. மொழியியல் என ஒன்றைச் சிறப்-