பக்கம்:தொல் திராவிட மொழி-கண்டுபிடிப்பு.pdf/9

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

7

டும் என்பதில்லை. அதே போல, கணக்கு M.A. பட்டம் பெற்றவர் வரலாற்று M.A. பட்டம் பெற்றாக வேண்டிய கட்டாயம் ஒன்று மில்லை. இவ்வாறே, தமிழ் M.A. படித்தவர்கள் மொழியியல் M.A. பட்டப்படிப்பு படித்துத்தான் ஆக வேண்டும் என்ற கட்டாயம் ஒரு சிறிதும் தேவையில்லை. மொழியியல் பயிலாமலே தமிழை வளர்க்க முடியும். எனவே, இந்த நிலையில், மொழியியல் பட்டத்தினர், மற்றவரும் மொழியியல் படித்தால்தான் தமிழ் அறிஞரெனக் கூறமுடியும் எனக் கூறுவதற்குத் தகுதியோ - உரிமையோ சிறிதும் இல்லை. மொழியியலார் சிலர் செய்யும் ஆராய்ச்சி தமிழ்க் கொலையாயிருப்பது கண்டறியப்படுகின்றது.

மற்றும், மொழியியலார் சிலர், திராவிட மொழிகள் பற்றிய ஆராய்ச்சியைத் தம் 'ஏக போக' உரிமையாகக் கொண்டிருப்பதாகத் தெரிகிறது. யானையைத் தூக்கிப் பானைமேலும் பானையைத் தூக்கி யானைமேலும் போட்டால் எப்படியோ, அப்படிப்போல, ஒரு மொழிச் சொற்களைத் தூக்கி இன்னொரு மொழிமேலும், அந்த மொழிச் சொற்களைத் தூக்கி இந்த மொழிமேலும் போட்டு என்னென்னவோ செய்கின்றனர். சொற்களை எழுத்து எழுத்தாகவும் அசை அசையாகவும் பிரித்து அறுவை மருத்துவம் செய்கின்றனர். மொழியியல் பட்டம் பெறாத தமிழ் அறிஞர்களை மட்டமாக மதிக்கும் மொழியியல் பட்டதாரிகள் செய்யும் சில செயல்களைத் தமிழ் அறிஞர்கள் தமிழ்க் கொலையாக எண்ணி வருந்துகின்றனர்-என்ற செய்தியையும் இவர்கள் உள்ளத்தில் கொள்ள வேண்டும்.

அடியேனும் ஒரு சிறிது மொழியியல் அறிந்தவனே. மொழியியலார் கூறாத எத்தனையோ புது இலக்கண