பக்கம்:தொழிலியல் விஞ்ஞானி ஜி. டி. நாயுடு.pdf/10

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

8

தொழிலியல் விஞ்ஞானி ஜி.டி. நாயுடு


அறிவியல் பொருட்காட்சி அரங்கில் நாங்கள் அந்தத் தேங்காயின் புகைப் படத்தைக் கண்டு ஆச்சரியப் பட்டோம்.

தமிழகத்தின் நாலா பக்கங்களிலிருந்தும் அந்த விஞ்ஞான வித்தக அரங்கிற்குச் சுற்றுலா பயணிகள் தினந்தோறும் வந்து - அதைப் பார்த்துவிட்டு, அவரவர் புருவங்களை மேலேற்றிக் கொண்டே செல்கிறார்கள். அந்த அற்புதத் தேங்காயின் உருவப்படம் மட்டுமா அங்கே இருக்கின்றது?

வாழை மரம் அளவு :
உயரம் உள்ள நேற்செடி!

உழவர் பெருமக்கள், தங்களது வயல்களில் விவசாயம் செய்து வரும் நெற்பயிர்களை நாம் கண்டிருக்கிறோம். அந்தப் பயிர்களைப் போலல்லாமல், ஒவ்வொரு நெற்பயிர் செடியும், வாழை மரம் போல் உயர்ந்த வளர்ந்திருப்பதை நீங்கள் யாராவது பார்த்திருக்கிறீர்களா? நாங்கள் அன்ற வாழை மரம் போல் நீண்டு உயர்ந்து வளமாக வளர்ந்துள்ள நெற்பயிர் மரக் காட்சிப் படங்களைக் கண்டோம்! வியந்தோம்!

அந்த வாழை மரம் போன்ற விவசாய நெற்பயிர்களில் கதிர்கள் முற்றி, நாணம் கொண்ட பருவப் பெண்களின் சிவந்த முகங்களைப் போல செந்நெற்கதிர்கள் கொத்துக் கொத்தாக காய்த்துத் தலைக் குனிந்துத் தொங்கிக் கொண்டிருக்கும் பயிர்களின் காட்சியையும் - நாங்கள் அந்த அரங்கிலுள்ள நெற்பயிர் புகைப் படங்களிலே பார்த்தோம். பிரமித்துப் போனோம்!

பிறகு, வாழை மரங்கள் உள்ள படத்தையும் கண்டோம். அந்த வாழை மரங்களிலே தள்ளப்பட்டிருந்த ஒவ்வொரு வாழைக் குலையிலும்; வரிசை வரிசையாக அடுக்கி வைத்த தார் போன்றிருந்த வாழைச் சீப்புகளிலே உள்ள நூற்றுக் கணக்கான வாழைக் காய்கள், ஏறக்குறைய ஆயிரத்துக்கும் மேலிருக்குமோ என்னவோ, அவ்வளவு பெரிய தோற்றமுடைய வாழைக் குலையை ஒவ்வொரு மரத்திலும் புகைப் படமாகப் பார்த்ததும்; எங்களையும் அறியாமல் அடே...யப்பா...! என்று அசந்து போனோம்!

தமிழ் நாட்டில் அபூர்வப் பிறவியாக, அதிசய மனிதராகப் பிறந்து மறைந்த தொழிலியல் விஞ்ஞானி கோயம்புத்தூர் துரைசாமி