பக்கம்:தொழிலியல் விஞ்ஞானி ஜி. டி. நாயுடு.pdf/100

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

98

தொழிலியல் விஞ்ஞானி ஜி.டி. நாயுடு


களில் விரிவாகவே நாயுடுவைப் பேச வைப்பார்கள் - செயிண்ட் லூயி மக்களும் - பள்ளி நிருவாகமும்.

பள்ளியில் கல்வி கற்கும் பிற மாணவர்கள், ஜி.டி. நாயுடு அவர்களைவிட வயதில் குறைவானவர்களே. அதனால் அந்த மாணவ - மணிகளுக்குத் தக்க அறிவுரைகளை வழங்கும் நோக்கத்தில் அவரது பேச்சுக்கள் அமையும்.

எடுத்துக்காட்டாக, “ஏமாறாதே, பிறரை ஏமாற்றாதே! மற்றவர்கள் பொருட்கள் மேல் பற்றாடாதே! உன் பொருளையும் இழந்து விடாதே சாராயம் போன்ற மது வகைகளை ஏறெடுத்தும் பார்க்காதே! உனக்குள்ள உடற் சக்தியை வீணாக்காதே; உடலை வளமாக, நலமாகக் காப்பாற்றிக் கொள்; ஏழ்மையை இகழாதே; பணக்காரரை புகழ்ந்து அடிமையாகாதே ஒழுக்கமாக இரு, இயற்கை அழகுடன் இரு என்பன போன்ற கருத்துக்களை எல்லாம் தனது பேச்சில் உலாவ விடுவார் ஜி.டி. நாயுடு.

அமெரிக்கப் பெண்களுக்கு
நாயுடு கூறிய அறிவுரை

ஒரு முறை ஜி.டி. நாயுடுவை மாதர் சங்கத்தில் உரையாற்ற அழைத்தார்கள், அங்கே அவர் பேசும்போது, பெண்களே! மயிர் அலங்காரத்தில் நேரத்தை வீணாக்காதீர், ஆடம்பர ஆடைகளுக்குப் பணத்தை விரயமாக்காதீர்; முகத்திற்கு பவுடர் வகைகளைப் பூசாதீர்; வாசனைப் பொருட்களால் உடலை மணக்க வைக்க முயற்சிக்காதீர், இயற்கை அழகே உங்களுக்கு இயற்கையாக இருந்தால் போதும்; உதடுகளைச் சாயம் பூசி கெடுக்காதீர்; ஒழுக்கமும், உண்மையும்தான் உங்களை முன்னேற்றும் கருவிகள் என்று அமைதியாகவும் - அன்பாகவும், அவர் கூறியதைக் கேட்ட மாதர் சங்கத்து மங்கையர், தங்கள் பூ போன்ற கைகளால் எழுப்பிய ஒலிகளில் ஒசை எழவில்லை; நசைதான் நாட்டியமாடியது.

அமெரிக்க - இங்கர்சாலும்;
தமிழ்நாட்டு அண்ணாவும்!

தமிழ் நாட்டில் எந்தச் சொற்பொழிவுகளை ஆற்றிட எவரை அழைத்தாலும், அறிவுக்குக் கூலி வழங்கும் வழக்கம் உண்டு.