பக்கம்:தொழிலியல் விஞ்ஞானி ஜி. டி. நாயுடு.pdf/104

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.
10. தொழில் துறை வளர்ச்சி ஒன்றே,
நாட்டின் வறுமையை நீக்கும் வழி!

அமெரிக்காவிலுள்ள நியூயார்க் நகர் ஆட்டோ மேட்டிவ் இஞ்ஜினியர் சங்கம், ஜி.டி. நாயுடு அவர்களைத் தனது சங்கத்தில் ஒரு நிர்வாக உறுப்பினராகப் பதிவு செய்து அவரைப் பெருமைப் படுத்தியது. அதே நியூயார்க்கில் உள்ள மெக்கானிக் இஞ்சினீயர் சங்கமும் அவரை உறுப்பினராக்கி மகிழ்ந்து பாராட்டியது.

பத்து பொறியியல் சங்கங்கள்
உறுப்பினராக்கி மகிழ்ந்தன!

இந்தியா திரும்பிய ஜி.டி.நாயுடுவை ஆந்திரா நாட்டிலுள்ள சிறு தொழிலாளர் சங்கம் உறுப்பினராக்கிக் கொண்டது. சென்னை சிறு தொழிலாளர் சங்கமும் அவரை ஓர் உறுப்பினராக்கியது.

மெட்ராஸ் ஸ்டேட் எனப்படும் சென்னை அரசாங்கமும் ஜி.டி. நாயுடுவைத் தொழில் வளர்ச்சிக் கழகத்தில் உறுப்பினராகப் பதிவு செய்து கொண்டது. சென்னைத் தொழில் நுட்ப சங்கம் அவரை ஓர் ஆலோசகராக ஏற்றுக் கொண்டது.

அகில இந்திய இஞ்சினியர் கழகம், இந்திய இயந்திரத் தயாரிப்பாளர் சங்கம், அனைத்திந்திய இயந்திர உற்பத்தியாளர் கழகத்திலும் ஜி.டி. நாயுடு உறுப்பினரானார்.

ஏறக்குறைய பத்து இந்திய இயந்திரப் பொறியாளர் சங்கங்கள் ஜி.டி. நாயுடு அவர்களை வரவேற்றுப் பாராட்டி உறுப்பினராக்கிக் கொண்டன. ஏன் தெரியுமா?

இந்திய நாட்டைத் தொழில் இந்தியாவாக்க வேண்டும் என்ற ஜி.டி.நாயுடுவின் எண்ணத்தைப் புரிந்து கொண்டதால், அவரை