பக்கம்:தொழிலியல் விஞ்ஞானி ஜி. டி. நாயுடு.pdf/11

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

புலவர் என்.வி. கலைமணி

9


நாயுடு என்று தமிழ் மக்களால் போற்றிப் புகழப்பட்ட ஜி.டி. நாயுடுவின் அறிவியல் காட்சியகத்திலே, விவசாயத் துறையின் இந்த விஞ்ஞான அற்புதங்களைப் புகைப் படங்களாக எடுத்து வைக்கப்பட்டிருக்கும் காட்சிகளிலே கண்டோம்.

சுற்றுலா பயணிகளுடன்
நானும் இணைந்தேன்

கோவை நகர் சென்று அந்தக் காட்சியை நான் கான விரும்பியதைப் போல, கல்லூரி மாணவ, மாணவியர்களும் நான் அங்கே சென்ற அன்று பேருந்துகளிலே பயணம் வந்து பிரசிடென்சி ஹால் என்ற காட்சியரங்கம் முன்பு கூடியிருந்தார்கள். அவர்கள் கூட்டத்திலே நானும் ஒருவனாகச் சேர்ந்துக் கொண்டேன்.

நாள்தோறும் இவ்வாறு காட்சி அரங்கம் முன்பு திரண்டு காணப்படும் பார்வையாளர்களை அழைத்துச் சென்று, அங்கே இருக்கின்ற புகைப்படக் காட்சிகளை விளக்கிக் கூறிட பொறியியல் படித்த சுமார் இருபது வயதுள்ள ஒரு தெரிவை பெண் எங்களுடன் வந்தார்.

எங்களுடன் வந்த சுற்றுலாப் பயணிகள் கேட்கும் கேள்வி களுக்கு அன்றலர்ந்த செந்தாமரை முகத்துடன் சற்றும் தயங்காமல், நகைச்சுவையுடனும் - நயத்துடனும் அந்தப் பெண் பதிலளித்துக் கொண்டே வந்து, ஒவ்வொரு காட்சியையும் சுட்டிக் காட்டினார்.

விஞ்ஞான மேதை ஜி.டி. நாயுடு அவர்கள், என்னென்ன அறிவியல் சாதனைகளைக் கண்டு பிடித்து உலகுக்கு அறிவு தானமாக, கொடை மட பண்போடு வழங்கினாரோ, அவை அனைத்தையும், அவற்றுடன் சம்பந்தப்பட்ட பிறவற்றையும் அந்தக் காட்சியக அரங்கத்துள் புகைப்படங்களாக எடுக்கப்பட்டு இடம் பெற்றிருந்தன.

அந்த நிழற்படக் காட்சிகள் ஒவ்வொன்றையும், என்போன்ற சுற்றுலா பயணிகள், மாணவிகள், மாணவர்கள், பொது மக்களுள் சிலராக வந்த எல்லாரும் கூர்ந்து நோக்கியவாறே அரங்குக்குள் நகர்ந்துக் கொண்டே இருந்தோம் - ஆமைகள் போல!

நாங்கள் அங்கே கண்ட சில காட்சிகள் இவை :