பக்கம்:தொழிலியல் விஞ்ஞானி ஜி. டி. நாயுடு.pdf/115

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

புலவர் என்.வி. கலைமணி

113


இயங்கவில்லை. மாறாக, ஈடிணையிலா இலட்சியங்களை வளர்க்கும் ஒரு நாட்டின் ஒப்பற்றக் கல்விமனாகவும், அதாவது - Educationist டாகவும் சிறந்தார்!

கற்றது கை மண்ணளவுதான் என்று கருதிய திரு. ஜி.டி.நாயுடு அவர்கள், கல்லாதது உலகளவு என்பதை உணர்ந்து. ஒவ்வொரு துறையிலும் ஊடுருவி உண்மை அறிவைக் கண்டு - அனுபவ அறிவைப் பெற்றார். இல்லையானால், தனது 47-வது வயதிலே எவனாவது அமெரிக்காவிலே போய் மாணவனாகச் சேர்ந்து கைத் தொழில் அறிவு பெறுவானா? பெற்றாரே திரு. நாயுடு!

திரு. ஜி.டி.நாயுடு வறுமையிலே வாடி வாடி வருந்தி, உணவு விடுதியிலே பணியாளராகச் சேர்ந்து பசிப் பிணி நீக்கிக் கொண்டு, ஊர் சுற்றிச் சுற்றி வணிக ஊக்கம் பெற்று முன்னேறும் வாய்ப்பு வெள்ளையர் ஒருவரால் வந்ததும் - ஒரே ஒரு பேருந்தை விலைக்கு வாங்கி உழைத்ததின் பயன்தான், தனக்கென ஒரு வழியை வகுத்துக் கொண்டு பணியாற்றியதின் பலன்தான், அவரை தேடி, நாடி, ஒடி வந்து புகழ் அரவணைத்துக் கொண்டு, உலக நெஞ்ச ஊஞ்சலில் ஆராரோ பாடி ஆடி அமர வைத்து, அழகு பார்த்தது எனலாம் அல்லவா? எண்ணிப் பாருங்கள் சரிதானா என்று?

எனவேதான், தொழிலியல் துறையில் தனக்கென ஓர் அடையாளச் சின்னத்தை உருவாக்கிக் கொண்ட திரு. நாயுடு, கல்வித் துறையிலும் தனது காலடிகளை எண்ணி எண்ணிப் பதித்தார்.

கல்வி உலகில் -
ஒரு மறுமலர்ச்சியாளர்!

கல்வி உலகிலே ஒரு மறுமலர்ச்சியை உருவாக்கினார்! அதனால் உண்டான எதிர்ப்புகளை ஏறுபோல எதிர்த்துச் சமாளித்தார்: தொழிற் கல்லூரிகளை ஏற்படுத்தினார். தொழில் நுட்ப ஆசிரியராகத் தொண்டு புரிந்தார்! தொண்டு என்றால் வளைவு என்ற ஒரு பொருளுண்டல்லவா?

அதற்கேற்ப, திரு. நாயுடு கல்விக்காக உழைத்த உழைப்புகளும், முயற்சிகளும், நடத்திய போராட்டங்களும், வழங்கிய நன்கொடைகளும் - அதனதன் தகுதிக்கேற்றவாறு வளைந்து கொடுத்து, நாட்டுப் பணியாற்றினார்! கல்வியால் நாடும்