பக்கம்:தொழிலியல் விஞ்ஞானி ஜி. டி. நாயுடு.pdf/12

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

10

தொழிலியல் விஞ்ஞானி ஜி.டி. நாயுடு


தொழிலியல் ஞானி நாயுடு அவர்கள் கண்டுபிடித்த கடிகாரங்கள், வானொலிப் பெட்டிகள், பொறியியல் இயந்திரங்களுக்காகக் கண்டுபிடிக்கப்பட்ட உதிரி உறுப்புகள், மனிதனுடைய உருவத்தைச் சிறியதாகவும், பெரியதாகவும், எதிரொலிக்கும் தகடுகள், அழகாக பாதுகாப்பாக, அடுக்கடுக்காக அவை அடுக்கி வைப்பட்டிருக்கும் காட்சிகள், இவற்றையெல்லாம் மேதை ஜி.டி. நாயுடு மறைவுக்குப் பிறகும், பொறுப்போடு திரட்டிச் சேகரித்து, பாதுகாப்போடு காட்சி அரங்கமாக வைக்கப்பட்டிருக்கும் அந்த விஞ்ஞான வித்தகரின் திருக்குமாரர் திரு. ஜி.டி. கோபால் அவர்களின் அக்கறையான அரும் உணர்வுகளையும் கண்டு, நான் மட்டுமன்று, என் போன்ற எண்ணிலர் அசந்து போனோம் அடே....யப்பா... என்று!

காட்சியகத்திலே கண்ட அதிசயங்கள்!

அந்த அரங்கத்தின் காட்சிகளில் ஒன்றில் - கார் ஒன்றைக் கண்டேன் பாவாணர் மொழிப்படி அந்த 'உந்து'வுக்கு மேல் கூரை இல்லை; அதாவது மூடப்படும் மேல் மூடி தகடு இல்லை. திறந்த வெளி உந்து அது. அதன் அப்போதைய விலை என்ன தெரியுமா? இரண்டே ஆயிரம் ரூபாய் மட்டும்தான்.

அந்த மேற்கூரையற்ற திறந்த காரிலே சவாரி செய்தவர்கள் யார் யார் தெரியுமா? ஒட்டுநர் ஜி.டி.நாயுடு, எதிர்கால இந்தியக் குடியரசுத் தலைவர்களுள் ஒருவராக இருந்தவரும், அப்போதைய தொழிற்சங்கத் தலைவராகவும் விளங்கிய திரு. வி.வி. கிரி, மற்றும் ஜி.டி. என். அவர்களின் நண்பர்கள் ஓரிருவர் உட்பட அந்த 'உந்து'வில் அமர்ந்து கோவை நகரைப் பவனி வந்திருக்கிறார்கள். அந்தக் காட்சிகளும் அரங்கில் புகைப்படங்களாக உள்ளன.

தந்தை பெரியாரும், தொழிலியல் ஞானியுமான ஜி.டி. நாயுடுவும் இணைந்து பங்கேற்ற சில விழாக்கள், பொதுமக்கள் கருத்தரங்குகள் ஆகியவற்றை நினைவுப்படுத்தும் நிகழ்ச்சிச் சம்பவங்களும் அங்கே படங்களாக வைக்கப்பட்டிருந்தன.

இவை மட்டுமா? மின்காந்த ஆற்றலோடு இயங்கும் விளையாட்டு இரயில் ஒன்றை எங்களுக்கு அங்கே இயக்கிக் காட்டினார்கள். அந்த இரயில், நாங்கள் தற்போதைய சென்னை