பக்கம்:தொழிலியல் விஞ்ஞானி ஜி. டி. நாயுடு.pdf/120

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

118

தொழிலியல் விஞ்ஞானி ஜி.டி. நாயுடு


மான்களுக்கு இடையே திரு. ஜி.டி. நாயுடு அவர்களும் பயிற்சி வகுப்புக்களை நடத்துவார்.

இந்தியா முழுவதும் உள்ள கல்லூரிகளில் விடுமுறைக் காலம் வந்ததும் மாணவர்கள் அவரவர் வீடுகளுக்குச் சென்று விடுவார்கள். ஆனால், கோபால் பாக் நாயுடு பயிற்சிக் கூடத்தில், மாணவர்கள் விடுமுறைக் காலத்திலும் பயிற்சி வகுப்பில்தான் பாட அநுபவம் பெறுவார்கள். இந்த பயிற்சி வகுப்புகள் ஏப்ரல் மாதத்தில் ஆரம்பமாகும், ஜூன் மாதத்தில் முடிவடைந்து விடும்.

கோபால் பாக் பொறியியல் பயிற்சி வகுப்பில் சேர்க்கப்படும் மாணவர்களில் பலர், இந்திய நாட்டின் பொறியியல் கல்லூரிகளிலே பொறியியல் பட்டம் படிப்பவர்களாகவே இருப்பார்கள் என்பது குறிப்பிடத்தக்கது.

அரசு பொறியியல் துறையில் பணியாற்றுபவர்களும் சில நேரங்களில் இங்கே பயிற்சி பெறுவார்கள். எஸ். எஸ். எல்.சி. மாணவர் மாணவிகளில் நுண்ணறிவாளர்களும் இருந்தால், அவர்களையும் இந்தப் படிப்பில் சேர்த்துக் கொள்வதுண்டு.

தமிழ்நாடு, பஞ்சாப், மும்பை, கொல்கொத்தா, மத்திய பிரதேசம், தெலுங்கு தேசம், கேரளா, ஒரிசா என்று இந்நாளில் பெயர் மாற்றமடைந்திருக்கும் சில மாநிலங்களில் இருந்தெல்லாம் ஆண்டு தோறும் மனுக்கள் வந்து கொண்டிருக்கும். அவற்றில் 200 மாணவர்கள் மட்டுமே பயிற்சிக்குத் தேர்வு செய்யப்படுவார்கள்.

சர்.சி.வி. இராமன்
பேசுகிறார் :

தேர்வில் வெற்றி பெறுபவர்களுக்குச் சான்றிதழ் வழங்கப்படும். முதல் மாணவராகத் தேர்வு செய்யப்படுபவர்க்கு பரிசுகள் கொடுக்கப்படும். இந்த ஆறுவாரம் பயிற்சி வகுப்புக்கள் ஆண்டுக்கு ஒரு முறை அல்லது இரண்டு மூன்று தடவைகள் நடத்தப்பட்டு வநதன.

இவ்வாறாக நடந்து வந்த ஆறாவது ஆறு வாரம் பயிற்சி வகுப்பு 1951 - ஆம் ஆண்டு ஜூன் மாதம் முடிந்தபோது, நோபல் பரிசு பெற்ற தமிழ் விஞ்ஞானியான சர். சி. வி. ராமன் அவர்கள்