பக்கம்:தொழிலியல் விஞ்ஞானி ஜி. டி. நாயுடு.pdf/129

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.
12. விந்தைகள் பல செய்த
விவசாய விஞ்ஞானி


“நத்தம்போல் கேடும் உளதாகும்; சாக்காடும்
வித்தகர்க்கு அல்லால் அரிது”

ஐயன் திருவள்ளுவர் பெருமான் தமிழ் இனத்துக்கென வகுத்தளிக்கப்பட்ட 'தமிழ் மறை'யில், மேற்கண்டவாறு தமிழர் நாகரீகத்தை நமக்கு நினைவூட்டுகிறார்.

இந்தப் பொய்யாமொழிக்கு, சிலர் சிலவாறு உரை உணர்த்தியிருந்தாலும், திருக்குறளார் வீ. முனுசாமி அவர்களின் "உலகப் பொதுமறை திருக்குறள் உரை விளக்கம்" நூலில், "புகழுடம்பிற்குப் பேரூக்கமாகும் கெடுதியும், அந்த புகழுடம்பு நிலைத்து நிற்பதற்கு, இறத்தலும், சிறந்த பல்கலைத் திறமையுடையவர்களுக்கு அல்லாமல் - மற்றையோருக்கு முடியாததாகும்" என்கிறார்.

புகழ் உடம்புக்கு கேடுகள் பெருகி வரும். அப்படிப்பட்ட புகழுடம்பு நிலைத்து நிற்பதற்கு இறத்தலும் நேரும். ஆனால், இவை யாருக்கு வரும்? சிறந்த பல்கலைத் திறமையை உடைய வர்களுக்கே அல்லாமல், மற்றவர்களுக்கு வாராது; முடியாததாகும்” என்பதே திருக்குறள் உரை விளக்கம் பொருளுரை ஆகும்.

ஆனால், இதே குறளுக்குப் பேராசிரியர் சாலமன் பாப்யைா அவர்கள், சற்றுத் தெளிவாகவே பொய்யாமொழியாரின் உள்ளத்தை நமக்கு உணர்த்துகிறார். அதாவது:

"பூத உடம்பின் வறுமையைப் புகழுடம்பின் செல்வ மாக்குவதும், பூத உடம்பின் அழிவைப் புகழுடம்பின் அழியாத தன்மை ஆக்குவதும், பிறர்க்கு ஈந்து, தாம் மெய் உணர்ந்து, அவா