பக்கம்:தொழிலியல் விஞ்ஞானி ஜி. டி. நாயுடு.pdf/130

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

128

தொழிலியல் விஞ்ஞானி ஜி.டி. நாயுடு


அறுத்த வித்தகர்க்கு ஆகுமே அன்றி, மற்றவர்க்கு ஆவது கடினம். இதுதான் புகழின் சிறப்பாகும்" என்கிறார்.

எனவே, திரு. ஜி.டி. நாயுடு அவர்கள் சிறந்த பல்கலைத் திறமையாளர். அவற்றுக்குச் சான்றாகத் தொழிலியல் துறையிலே ஒரு விஞ்ஞானியாகவும், பொருள் உற்பத்தியிலே சிறந்த வித்தகராகவும், கண்டுபிடித்த விஞ்ஞானக் கருவிகளை மக்கள் மன்றங்கள் இடையே செல்வாக்கைச் செழிக்க வைப்பதிலும், உலகம் வியக்கும் மேதையாகத் திகழ்ந்தவர் என்பதை இதுவரை நாம் கண்டு களித்தோம்!

வறுமை வழுக்கு நிலம்
கலைக் கல்லூரி ஊன்றுகோல் கல்வி!

இரண்டாவதாக, திரு. நாயுடு அவர்கள், கலைக் கல்லூரி களைவிட தொழிற் கல்விக்கு பெருமை ஏற்படுத்தி, நாட்டையும் மக்களையும் வறுமை என்ற வழுக்கு நிலத்திலே காலிடறி விழாமல் அதைத் தடுக்கும் ஊன்றுகோலாக, தொழிற் கல்லூரிகளைத் திறந்ததோடு நில்லாமல், பல தொழிற்சாலைகளைத் தனது திறமையால் உருவாக்கி, அவற்றுக்கு அரசு ஆதரவுகளையும் பெற்று மக்களிடம் நிலையான புகழுடம்பை நாட்டியவர் திரு. நாயுடு அவர்கள்.

திரு. நாயுடு அவர்கள் இயந்திரங்கள் இடையே வாழ்ந்து வந்தாலும், அவர் இரும்பு இதயம் படைத்தவர் அல்லர் பல நேரங்களில் அவர் கரும்பு இதயமாகவும் இருந்தவர். அவரிடம் பழகியவர்கள் இதை அறிவர்!

இந்தப் புத்தகத்தை எழுதுகின்ற நான், விஞ்ஞான விந்தையாளர் திரு. ஜி.டி. நாயுடு அவர்களோடு எனது வயதுக்கேற்ற வரம்புக்குள் மும்முறை சந்தித்து உரையாடி, அவருடனேயே ஒடிப் பின் தொடர்ந்த ஒரு நிருபன். நான் அப்போது 'முரசொலி', 'மாலை மணி' நாளேடுகளின் துணையாசிரியனாகப் பணியாற்றிக் கொண்டிருந்த நேரம்.

'முரசொலி'யில் நான் பணிபுரிந்தபோது, தஞ்சை மாநகரில் நடைபெற்ற "மாணவர் இந்தி எதிர்ப்பு மாநாட்டில் கலந்து கொண்டு உரையாற்றிட திரு. ஜி.டி. நாயுடு வந்திருந்தார். அந்த மாநாட்டை