பக்கம்:தொழிலியல் விஞ்ஞானி ஜி. டி. நாயுடு.pdf/132

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

130

தொழிலியல் விஞ்ஞானி ஜி.டி. நாயுடு


வெங்களத்திலே விளையாட வைத்தன. காரணம், அந்த வீர மங்கை நடமாடிய மண் இந்த சிவகங்கை என்றார் திரு. நாயுடு.

இந்தி எதிர்ப்பு போரிலே செங்களம் காணத் திரண்டிருந்த செருமுனைச் செம்மல்களான மாணவர் படைகள், விந்தை மனிதர் ஜி.டி. நாயுடு அவர்களின் வீர உரையைக் கேட்டு வியந்து வியந்து கையொலிகளை எழுப்பிக் கொண்டிருந்த காட்சிகள், தமிழ் மக்களைக் கனல்பட்டக் கந்தகம் போல, இந்தி ஒழிக, ஒழிக. இந்தி, தமிழ் வாழ்க!" என்ற ஒலிகளை எழுப்பியதைக் கண்ட திரு. நாயுடு அவர்கள், தனது பேச்சு வலிமைகளை மேடையை விட்டு இறங்கிய பின்பு உணவுக்குப் போகும் வழியில் காரிலே செல்லும்போது, மக்களது உண்மையான தமிழ் ஆவேச உணர்ச்சிகளையும், இந்தி எதிர்ப்பு எழுச்சிகளையும் அன்று கண்டதாக அந்த மேதை என்னிடம் குறிப்பிட்டார். அப்போது மாணவர் தலைவர்களிலே ஒருவரான நாவளவன் என்பவரும் அந்தக் காரிலே எங்களுடன் வந்திருந்தார்.

எனவே, திரு. நாயுடு அவர்கள் இரும்புடனேயே தனது வாழ்நாளின் பெரும் பகுதி, நாட்களை கழித்தவர் என்றாலும், அவரது இதயம் இரும்பாக இல்லை. எண்ணற்ற இடங்களில் கரும்பாகவும் திகழ்ந்தார்.

தாய்மொழிக்குப் பங்கம் வந்தபோது அவர் கனல் பட்டக் எண்ணெய்க் கடுகு போல வெடித்து ஒலி எழுப்பினார். அத்தகைய ஒலிகள்தான் தஞ்சைப் பாசறைத் திடல் மாணவர் இந்தி எதிர்ப்பு மாநாட்டிலும், சிவகங்கை மாநாட்டிலும் திரு. நாயுடு பேச்சுகள் அமைந்திருந்தன என்பதற்காகவே இங்கே சுட்டிக் காட்டினேன்!

அதே ஜி.டி. நாயுடு அவர்கள் நமது நாட்டு விவசாய அருமைகளை உணர்ந்து செயல்பட்டார். மாடு கட்டிப் போராடித்தால் மாளாது செந்நெல் என்று, ஆணைக் கட்டிப் போராடித்த விவசாயப் பெருமக்களது பண்டை நாட்களின் அருமை. பெருமைகளுக்குத் திரு. ஜி.டி. நாயுடு மீண்டும் புது வரலாறு படைத்தார்.

தொழில் வளர்ச்சி ஒன்றே நாட்டின் வறுமையை முழுக்க முழுக்க போக்கி விடாது என்பதை உணர்ந்த திரு. நாயுடு அவர்கள், நமது நாடு விவசாய நாடு என்பதையும், விவசாயிகள்தான் உலகுக் குரிய உணவை விளைவித்து வாழ வைப்பவர்கள் என்பதையும்