பக்கம்:தொழிலியல் விஞ்ஞானி ஜி. டி. நாயுடு.pdf/133

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

புலவர் என்.வி. கலைமணி

131


நன்கு புரிந்தவர்தான் நாயுடு அவர்கள். அதனால், விவசாயத்தில் புதிய மறுமலர்ச்சிகளைச் செய்ய முடியுமா என்று அவர் சிந்தித்தார்!

விவசாயத்தில்
விஞ்ஞானம்!

சிறந்த கருவிகளையும், இன்றைய நிலைக்கு ஏற்ற விவசாய உரங்களையும் பயன்படுத்தி விளைச்சலை விருத்தி செய்ய முடியுமா என்று சிந்தித்து அதற்கான வழிகளை நாடினார். விவசாயத்தில் விஞ்ஞானம் ஊடுருவ வேண்டும். அப்போதுதான் விளைச்சல் பெருகும் என்று விவசாயகளுக்கு விளக்கம் கூறினார்!

புதிய முறைகளை விவசாயத்தில் புகுத்தி உணவுப் பொருட்களை எப்படியெல்லாம் பெருக்க முடியும் என்பதை அவர் கிராம மக்களுக்கு எடுத்துரைத்தார்.

மேல் நாட்டில் 1950-ஆம் ஆண்டில் ஸ்டாக்ஹோம் என்ற நகரில் அனைத்துலக விவசாயிகள் மாநாடு நடைபெற்றது. அம் மாநாட்டில் திரு. ஜி.டி. நாயுடு கலந்து கொண்டு விவசாயம் மேம்பாடுகளையும் அரிய உரையாக நிகழ்த்தினார்.

கோவை மாவட்ட விவசாயக் கல்லூரியின் வளர்ச்சிக் குழு உறுப்பினராக இருந்த நாயுடு, மீண்டும் அந்தக் குழு கூடியபோது சில விவசாய விஞ்ஞான விந்தைகளை அவர் விளக்கிப் பேசினார்.

தொழிலியல், பொறியியல் வித்தகங்களை நன்குனர்ந்த திரு. நாயுடுவுக்கு, கிராமத்து விவசாயம் பற்றி என்ன தெரியும் என்று எண்ணியவர்கள் மத்தியில், அவர் விவசாயம் குறித்து என்னென்ன குறிப்பிட்டாரோ தனது உரையில், அவையனைத்தையும் சோதனைகள், வாயிலாகச் செய்து காட்டியதைப் பார்த்தவர்கள் வியந்து போனார்கள்!

இவ்வாறு நாயுடு செய்த சோதனைகள் விவசாயத் துறையில் அன்று வரை எவரும் செய்து காட்டாத புதுமைகளாகவே இருந்தன. அதனால் விவசாய உற்பத்திக்கு அவை புது வழிகளாக அமைந்தன.

கோயம்புத்தூர் நகருக்கு அடுத்துள்ள போத்தனூர் என்னும் நகரில், திரு. நாயுடு தனது விவசாய விந்தைகளை, அதற்கான