பக்கம்:தொழிலியல் விஞ்ஞானி ஜி. டி. நாயுடு.pdf/136

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

134

தொழிலியல் விஞ்ஞானி ஜி.டி. நாயுடு


கிளைகள் பெற்றிருந்தன. இதில் 39 கதிர்கள் காணப்படுகின்றன. எல்லாத் தண்டுகளின் மொத்த நீளம் 181 அடிகள் இருப்பதாகப் பார்த்தவர்கள் கணக்கிட்டு இருக்கிறார்கள்.

இந்தச் சோளச் செடியின் விதைகளை மறு பயிராக விதைக்கப்படும் போது, அதன் கன்றுகள் இரண்டு திங்களுக்குள் 10 அடிக்கு மேல் உயரமாக வளர்ந்து விடுகின்றன.

காலி பிளவர்
பயிர் பலன்!

காலி பிளவர் செடிக்கும் திரு. நாயுடு இரசாயன ஊசி போட்டுப் பயிரிட்டிருக்கிறார். இந்தச் செடி 3 முதல் 4 அடிகள் வரை மிகச் செழிப்பாகப் பயிராயின. ஆனால், காலிஃபிளவர் செடிகளை மறுபடியும் பயிரிடும்போது, இரசாயன ஊசி போட்ட மற்ற பயிர் களைப் போல அதன் விதைகள் பலன் கொடுக்கவில்லை. சாதாரண செடிகளைப் போலவே அவை பலன் கொடுக்கின்றன. என்ன காரணமோ தெரியவில்லை. திரு. நாயுடு அவர்கள் அதை மீண்டும் மீண்டும் ஆராய்ச்சி செய்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கதாகும்.

ஒரு வாழை மரத்தில்
9 வகை சுவை பழங்கள்!

மற்றப் பயிர்களைப் போலவே, திரு. நாயுடு வாழைக் கன்றுகளுக்கும், இரசாயன மருந்து ஊசி போட்டு ஆராய்ச்சி செய்தார். அதனால், அவர் கண்டு பிடித்த பலன் என்ன தெரியுமா?

ஒரே ஒரு வாழை மரத்தின் பழங்கள்; ஒன்பது வகையான சுவைகளோடு பயிராவதை அவர் கண்டார். ஆனால், பழங்களின் அளவும், விளைச்சலும் அதிகமாகக் காணப்படவில்லை என்பதையும் உணர்ந்தார்.

ஒரே பப்பாளி மரத்தில்
நூற்றுக் கணக்கான காய்கள்!

பப்பாளிப் பழம் விளையும் மரங்களுக்கு திரு. நாயுடு ஊசி போட்டு ஆராய்ந்தார். அந்த மரங்களில் அளவுக்கு மீறிய பழங்கள் விளைவதை அவர் கண்டார்.