பக்கம்:தொழிலியல் விஞ்ஞானி ஜி. டி. நாயுடு.pdf/137

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

புலவர் என்.வி. கலைமணி

135



ஒவ்வொரு பப்பாளி மரத்திலும், நூற்றுக் கணக்கான காய்கள் விளைகின்றன. அவை ஒரே மாதிரியான உருவமாக இல்லாமல், பல்வேறு வடிவங்களோடு காய்க்கின்றன.

பப்பாளிப் பழம், பலாப் பழங்கள் வடிவங்களிலும், மாம்பழம் அளவுகளிலும் பழுக்கின்றன. ஒரே கிளையில் பழுக்கும் பழங்கள் பல வடிவங்களில் பழுத்துக் காணப்படுவதற்கு என்ன காரணம் என்பதையும் திரு. நாயுடு ஆராய்ந்தார். இவ்வாறு ஒரே கிளையில் பழுக்கும் பழங்கள் ஒவ்வொன்றும், உருவ மாறுதல்கள் பெற்றிருப்பதும் ஒரு விஞ்ஞான விந்தை அல்லவா?

ஊசி போடப்படாத பப்பாளி மரத்தில் காய்கள் மர உச்சியில், தென்னை, பனை மரங்களைப் போலவே காய்ப்பது வழக்கம். ஆனால், ஊசி போடப்பட்ட மரங்கள் தரை மட்டத்திலிருந்து உச்சி வரை, பலா மரத்தைப் போல காய்க்கின்றன. அப்படிப்பட்ட பழங்கள் பழுத்த பின்பு இனிமை மிகுந்த சுவையோடு இருக்கின்றன. இதுவும் ஒரு விஞ்ஞான விந்தை அல்லவா?

பப்பாளிப் பழம் உடலுக்கு நல்ல மருந்தாவது போல, உணவுச் செரிமானத்தையும் உருவாக்குகின்றது. ஊசி போடப்படாத பப்பாளி மரங்களில் மூன்றாண்டுகளுக்குப் பிறகு, சுவை அதிகமாகக் காணப்படுவதில்லை. ஆனால், பல ஆண்டுகள் அவை உயிரோடு வாழ்வது எண்ணமோ உண்மை.

இனிப்பு ஆரஞ்சு கசக்கும்!
கசப்பு ஆரஞ்சு இனிக்கும்!

திரு. நாயுடு அவர்கள், ஆரஞ்சுப் பழம் விளைச்சலை, ஒரு முறைக்குப் பன்முறை ஆராய்ந்து பார்த்தார். அதில் அவர் அவ்வளவாக வெற்றி பெறவில்லை. ஆரஞ்சுப் பழங்களின் சுவையில், தனது ஊசி மருந்தால் சுவை மாற்றத்தை உருவாக்கி இருக்கிறார்.

இதில் என்ன விஞ்ஞான விந்தையை திரு. நாயுடு உருவாக்கி இருக்கிறார் தெரியுமா? ஊசி போடப்பட்ட ஆரஞ்சுப் பழங்களை இனிப்புச் சுவையிலே இருந்து கசப்புச் சுவைக்கும், கசப்புச் சுவையிலே இருந்து இனிப்புச் சுவைக்கும் மாற்றிட சில இரசாயன முறையைப்