பக்கம்:தொழிலியல் விஞ்ஞானி ஜி. டி. நாயுடு.pdf/14

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

12

தொழிலியல் விஞ்ஞானி ஜி.டி. நாயுடு


விஞ்ஞான மேதை மட்டுமல்ல ஜி.டி.நாயுடு; ஒரு தொழில் மேதையும் கூட. தனது மோட்டார் தொழிலை, ஜி.டி. நாயுடு ஒரே ஒரு பேருந்துவைக் கொண்டு இயக்கத் துவங்கினார்.

முதலாளியும் அவரே!
தொழிலாளியும் அவரே!

எறக்குறைய 200க்கும் மேற்பட்ட பேருந்துகளுக்கு ஜி.டி. நாயுடு உரிமையாளர் ஆனார் என்றால், இது என்ன மாய மந்திரத்தால அந்த பேருந்துகளை உருவாக்கினார்?

இது என்ன சாதாரணமான சாதனையா? அவற்றுக்காக அவர் இரவும் பகலும் உழைத்த உழைப்புகள் என்ன சாமான்யமானதா? எண்ணிப் பாருங்கள். இவரல்லவா உழைப்பால் உயர்ந்த உத்தமர்?

அமெரிக்க மோட்டார் மன்னர் ரூதர் ஃபோர்டு, தனது மோட்டார் கார் தொழிலில் சாதனை புரிய என்ன அரும்பாடு பட்டாரோ, அவரைவிட பல மடங்கு உழைப்புக்களை ஜி.டி. நாயுடு தனது தொழிற்துறை வெற்றிக்காகத் தியாகம் செய்தவர் என்றால், இது ஒர் அரிய செயற்கரிய செயலல்லவா?

கோவையில் பேருந்துகளை நடத்திய அவரது துவக்கக் காலப் பேருந்து நிறுவனத்துக்கு ஜி.டி. நாயுடுவே முதலாளி. அவரே அந்த ஒரு பேருந்துக்குரிய ஒட்டுநர், அவரே கிளினர். பஸ் நிலையத்தில் குரல் கொடுத்துப் பயணிகளைச் சேகரிக்கும் பணியாளர், சுருங்கக் கூறுவதானால் எல்லாமே ஜி.டி. நாயுடு தான்.

முதலாளிக்கு முதலாளியாகவும், தொழிலாளிக்குத் தொழிலாளியாகவும் அவரே வேலை செய்ததால்தான், தொழிலாளிகளின் வாழ்க்கைத் தரம், வளம், நலம் ஆகியவைகள் உயர முடியும் என்ற உண்மைகளை அவர் உணர்ந்தார்.

அவரது பேருந்து நிறுவனத்தில் தொழிலாளி ஒருவன் உடல் நலமில்லாமல் தொழிலுக்கு வந்து பணியாற்றினால், ஜி.டி. நாயுடு நிறுவன நிர்வாகம் அந்தத் தொழிலாளிக்குப் பத்து ரூபாயை அபராதம் விதித்தது. இதிலிருந்து நமக்கு என்ன தெரிகிறது?

தொழிலாளர் சுகமே, நலமே தனது சுகம், நலம் என்று ஜி.டி. நாயுடு எண்ணி வாழ்ந்ததால்தான், அவரால் ஒரு பெரும் பேருந்து