பக்கம்:தொழிலியல் விஞ்ஞானி ஜி. டி. நாயுடு.pdf/152

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

150

தொழிலியல் விஞ்ஞானி ஜி.டி. நாயுடு



யோடுமொழியும் திறன், கேட்போரை ஈர்க்கும் சொல் வளம், கருத்து வளம் திறன்,தட்டுத் தடுங்கல் ஏற்படாமல் பேசும் அவையச்சம் அற்றத் திறன், எதையும் ஆனித்தரமாக எடுத்துரைக்கும் வாதத் திறன், எவராலும் அவர் மூன்பு - "நா"வை அஞ்சவிடாமல் அடக்கத்தேடு "நா"வாடும் திறன், அறிவுரைகளில் உயர்ந்த இலட்சியங்களை உதயநிலபோல ஒளி படரவைக்கும் பாலொளித் திறன். பேச்சுக்களைக் கேட்காதவர்களும் பிறரிடம் கூறும் போது ஐயோ கேட்காமல் விட்டுவிட்டோமே என்று ஏக்கமுறும் திறன் ஆகிய அனைத்துத் திறன்களுக்கும் அவரது 'நா'பரதம் ஆடியதுண்டு.

சென்னை, மதுரை. திருச்சி, கோவை , தஞ்சை, காரைக்குடி, வானியம் பாடி, சிவகங்கை போன்ற நகர்களிலே உள்ள கல்லுரிகளின் அழைப்புக்களுக்குச் சென்று தனது நேர்மையான கருத்துக்களை முழக்கமிட்டவர் திரு.நாயுடு அவர்கள்.

என்ன நினைக்கிறாரோ திரு.நாயுடு மாணவர்களுக்கு அறிவுரைகள் கூறிட,அதை அப்படியே அஞ்சா நெஞ்சுடன் கூறவல்ல நாவலர் நாயுடு அவர்கள்!

சில நேரங்களில் மாணவர்கள் அவரது அறிவுரைகளது அருமைகள் புரியாமல், கல்லூரிக் கூச்சலைப் போடுவார்கள். அவற்றை எல்லாம் பொருட்படுத்தாமல், இனிமையாக தந்தை ஒருவர் கூறும் அறிவுரைகள் போல, அமைதியாக நாயுடு அவர்கள் பேசிய மாநாடுகளும் - கூட்டங்களும் கூட உண்டு.

அத்தகைய ஓர் அறிஞரின் அறிவுரைகளை நாம் அறிந்து கொண்டால், வாழ்க்கைக்குப் புத்துணர்வு உண்டாகும் என்பதால் அவற்றில் சிலவற்றை வாசகர்கள் முன்பு படைக்கின்றோம்அறிவுரை விருந்துக்குரிய அறுசுவைகளாக:

மதுரை கல்லூரியில்
நாயுடு அறிவுரை!

மதுரைக் கல்லூரியின் கணித விஞ்ஞானக் கழகத்தில் 24.2.1953 - அன்று ஜி.டி.நாயுடு ஆற்றிய சொற்பொழிவு அறிவுரை இது :