பக்கம்:தொழிலியல் விஞ்ஞானி ஜி. டி. நாயுடு.pdf/172

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

170

தொழிலியல் விஞ்ஞானி ஜி.டி. நாயுடு



திரு. நாயுடு அவர்கள் தனது அழியாத அறப் பெருமைகள் வாயிலாகவும், விந்தைகள் பல புரிந்த விஞ்ஞானம் மூலமாகவும், கல்விப் புரட்சிகளாலும் நிலையான ஒரு புகழ் இடத்தை ஜி.டி. நாயுடு பெற்று வந்தார்.

ஏப்ரல் ஃபூல்
விளையாட்டு!

கோவை நகர் சென்றவர்களுக்குத் தெரியும். இன்றும் கோவையில் ஆர்.எஸ். புரம். (R.S. Puram) என்ற ஒரு பகுதி நகரம் இருப்பதைப் பார்த்திருப்பார்கள். அந்த நகரின் முழு பெயர் இரத்தின சபாபதி புரம் என்பதாகும். அந்த திவான் பகதூர் இரத்தின சபாபதி முதலியார் என்பவர் கோவை நகரின் புகழ் பெற்றவர்களிலே ஒருவர். அவர் நமது நாயுடுவுக்கு மிக நெருங்கிய நண்பராவார்.

ஒரு நாள் நாயுடு அவர்கள் இரத்தின சபாபதி முதலியார் தேநீர் விருந்துக்கு அழைப்பது போல, கோவை நகரத்திலே உள்ள எல்லா முக்கிய பிரமுகர்கள் அனைவருக்கும் அழைப்பு அனுப்பி விட்டார்.

அழைப்பில் குறிப்பிட்ட நாளன்று - நகரப் பிரமுகர்கள் எல்லாரும் முதலியார் வீட்டிற்குத் திரண்டு வந்து கூடி அமர்ந்திருக் கிறார்கள். முதலியார் வீடு தியான வீடு போல மெளனமாகக் காட்சி தந்தது. ஆனால், அவர்களில் யாருக்கும் ஒன்றும் புரியவில்லை. வெளியே சென்றிருந்த திரு. முதலியார் தனது வீட்டுக்குள் நுழைந்தார்: ஒரே பிரமுகர்கள் கூட்டமாக இருந்தது. அவருக்கும் ஒன்றுமே புரியாத குழப்பமாக இருந்தது. அந்தப் பிரமுகர்கள் கூட்டத்தில் ஜி.டி.நாயுடுவும் அமர்ந்திருந்தார் - ஒன்றும் அறியாதவரைப் போல!

திரு. முதலியார், திரு. நாயுடுவை அழைத்து: "என்ன இது ஒரே கூட்டம்!" என்று விசாரித்தார். உடனே நாயுடு அவர்கள், காலண்டரைச் சுட்டிக் காட்டினார். அதில் 'ஏப்ரல் 1' என்று அச்சிடப்பட்டிருந்தது. அப்போதுதான் திரு. முதலியாருக்கும் உண்மை புரிந்தது. பலருக்கும் நடுவில் தன்னை திரு. நாயுடு ஏப்ரல் முட்டாளாக ஆக்கிவிட்டாரே என்பதைப் புரிந்து கொண்டார் திரு. முதலியார்.