பக்கம்:தொழிலியல் விஞ்ஞானி ஜி. டி. நாயுடு.pdf/186

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

184

தொழிலியல் விஞ்ஞானி ஜி.டி. நாயுடு


மிக உயர்ந்த நட்புணர்ச்சியையும், அறிவின் ஆழத்தையும், விடா முயற்சியையும் நமக்கு எடுத்துக் காட்டுகின்றது' என்று அவர் கூறியுள்ளார்.

சர். சி.பி. இராமசாமி
ஐயர் கண்டனம்!

'ஜி.டி. நாயுடு தனக்கே உரிய முறையில் சிந்தித்து செயலாற்றுகிறார். அவருடைய முறை புதிய முறை அதனால், மக்கள் போற்றுவதற்குரிய பல அரிய வெற்றிகளை அவர் கண்டிருக்கின்றார்.

"அவருடைய ஆர்வத்தையும், திறமையையும், தலைமையையும், இதுவரை மத்திய - மாநில அரசுகளால் பாராட்டப்படாதது கண்டனத்திற்குரிய செயலாகும். மக்களது துரதிருஷ்டமே! அவரது தனித்திறமையை நாமும் - நாடும் பெருமளவில் பயன்படுத்தி கொண்டிருக்க வேண்டும்".

தலைமை என்ஜினியர்
டாக்டர் பி.என்.டே..!

வங்காள நாட்டின் அரசு தலைமைப் பொறியாளராகப் பணியாற்றுபவர் டாக்டர் பி.என்.டே அவர் கூறுவதைக் கேட்போம்!

"ஜி.டி. நாயுடு ஒரு தனிப் பல்கலைக் கழகம். அவரது நிர்வாக அமைப்பு, கண்காட்சி, விவசாயப் பண்ணை ஆகியவை விந்தையானவை. நான் உலகம் முழுவதும் சென்றிருக்கிறேன். என்றாலும், இவற்றைப் போன்ற விந்தைகளை நான் வேறு எங்குமே கண்டதில்லை. ஜி.டி. நாயுடுவைப் பார்க்க வருவது ஒரு புனிதமான இடத்துக்கு யாத்திரை போவதற்குச் சமமாகும்.

ஜெர்மன் பத்திரிக்கையாளர்
வில்லி ஸ்டுவர் வால்ட் பாராட்டு!

ஜெர்மன் நாட்டிலே இருந்து வெளிவரும் ஸ்டட் கார்ட் செய்துங் பத்திரிக்கையின் நிருபர் வில்லி ஸ்டுவர் வால்ட் என்பவர் ஜி.டி. நாயுடுவைப் பாராட்டி எழுதியதாவது.

“எனது பத்திரிக்கை வாழ்வின் 25 ஆண்டுக் காலத்தில் நான் சந்தித்த மனிதர்களில் மிகவும் விந்தையானவர் ஜி.டி. நாயுடுதான்.