பக்கம்:தொழிலியல் விஞ்ஞானி ஜி. டி. நாயுடு.pdf/188

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

186

தொழிலியல் விஞ்ஞானி ஜி.டி. நாயுடு


அனுப்ப வேண்டும் என்பது எங்களது ஆசை. ஆனால், நீங்கள் எத்தனை இடங்கள் ஒதுக்குவீர்களோ அத்துடன் திருப்தி அடைவோம்.

உங்களிடம் பெறுவதைப் போன்ற ஒரு பயிற்சியை எங்கள் மாணவர்கள் இந்தியாவில் வேறு எங்குமே பெற முடியாது என்பதை நான் அறிவேன். நான் இந்தியாவில் உள்ள பல்வேறு கல்வி நிலையங்களைப் பார்வையிட்டு இருக்கிறேன். ஆனால், தாங்கள் தரும் பயிற்சியும், பண்பாட்டு உணர்ச்சியும் அலாதியானவை என்பது எனது முடிவான கருத்து! அதனால்தான் எங்கள் மாணவர்களை உங்களிடம் அனுப்புகிறோம். நீங்கள் நிச்சயம் இடம் ஒதுக்கி ஆதரிப்பீர்கள் என்று எதிர்பார்க்கின்றோம்.

இந்தியக் கல்வி அமைச்சர்
டாக்டர் ஹுமாயூன் கபீர்!

இந்தியாவின் மத்திய அமைச்சர்களுள் ஒருவரான டாக்டர் ஹுமாயூன் கபீர் அவர்கள் எழுதியதாவது :

"திரு. ஜி.டி. நாயுடுவைப் பார்ப்பதும், அவரோடு தொடர்பு கொள்வதும் நமக்கு இன்பத்தையும், கல்வி அறிவையும் வழங்குகின்றன. அவர் ஓர் இயந்திர வல்லுநர் மட்டுமல்லர் - அவரே ஓர் இயந்திரமும் ஆவார். அவருடைய ஆற்றலும், ஆர்வமும் அழிவற்றவை. அவருடைய நிர்வாகத் திறமை நமக்கெல்லாம் ஓர் எடுத்துக்காட்டு அவர் பல துறைகளில் ஆராய்ச்சிகளும், சோதனை களும் செய்து, நாட்டிற்குப் பல வெற்றிகளைத் தந்துள்ளார். நாடு அவரைப் பெரிதும் நம்பி இருக்கிறது.

இத்தாலி நண்பர்களுள்
வெர்னர் ரியட்டர் விட்டேல்!

இத்தாலி நாட்டு நண்பர்களுள் ஒருவரான வெர்னர் ரியட்டர் விட்டேல் என்பவர் ஜி.டி. நாயுடுவால் கண்டுபிடிக்கப்பட்ட நீரிழிவு நோய் நீக்கும் மருந்தை உண்டு குணமானவர். அவர் 9.7.1955 - அன்று எழுதிய பாராட்டுரை :

"உங்களை நான் இத்தாலியில் முதன் முதலாகச் சந்தித்தபொழுது, உங்கள் நிறுவனத்திற்கு ஏதாகிலும் நன்கொடை அளிக்க விரும்பினேன். ஆனால், நீங்கள் ஏற்றுக் கொள்ள மறுத்து