பக்கம்:தொழிலியல் விஞ்ஞானி ஜி. டி. நாயுடு.pdf/19

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.
2. படிக்காத மேதை நாயுடு;
பார் போற்றும் விஞ்ஞானி ஆனார்!

இராபர்ட் கிளைவும்
ஜி. துரைசாமியும்!

இராபர்ட் கிளைவ் என்ற ஒரு சிறுவன் இங்கிலாந்து நாட்டிலே தோன்றினார்! அவன் ஒரு தீராத விளையாட்டுப் பிள்ளையாக இருந்தான். பள்ளிப் பருவக் காலத்தில் அவன் மிகப் பெரும் குறும்பன். எங்கே கலகம் உண்டாகின்றதோ, எந்தெந்த இலண்டன் நகர வீதிகளிலே சண்டையும் சச்சரவும் காணப்படுகின்றதோ அந்தந்த இடங்களிலே எல்லாம் கிளைவ் தான் காரண கர்த்தாவாக விளங்கினான்.

கற்களை எடுத்து கடைகள் மேலே வீசுவான். காரணம், கடைக்காரன் கிளைவ் கேட்டதைத் தரமாட்டான்; கொடுக்க மாட்டான் என்றால், கடையிலே அவன் கேட்டப் பொருள் இருக்காது. அதனால் வாயடி வம்புகளை வளர்ப்பான், சாக்கடைச் சேறுகளை வாரி கடை மீது வீசுவான். அதனால் ஒரு கலகம் தோன்றும். கடை வீதியே அவன் குறும்புத்தனத்தைக் கண்டிக்கும்; இழிவாகப் பேசும், காவல் துறைக்குள் புகார்கள் புகும். மன்னித்து அவனை வெளியே விரட்டுவார்கள் - சிறு பையனாக இருக்கிறானே என்ற காரணத்தால்.

அத்தகைய ஒரு போக்கிரி என்று பெயரெடுத்தவன் - வாலிபனானான். பிரிட்டிஷ் படைகளின் ஒரு பிரிவான கிழக்கிந்தியக் கம்பெனி என்ற வணிக நிறுவனத்திலே அவன் சேர்க்கப்பட்டான் - வணிகம் செய்யும் ஊழியனாக!

குறும்புகளே குணமாக வளர்ந்த அந்தக் குறும்பனுடைய தொல்லைகளால் உருவான குழப்பங்களைக் கண்டு; அவன்